Tamilnadu

News May 20, 2024

சிவகங்கை: நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

நீலகிரி : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

கோவை: நாளை மழைக்கு வாய்ப்பு!

image

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

மரக்கிளை விழுந்ததால் தகராறு இருவர் காயம்

image

திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (38) இவருடைய சித்தப்பா செல்வராஜ்(60) இவர்கள் இரண்டு பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று செல்வராஜின் வீட்டின் உள்ள மரக்கிளைகள் எபனேசர் வீட்டில் விழுந்ததால் தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். காயத்துடன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 20, 2024

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட பள்ளி வாகனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யும் பணி இன்று ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சாரு ஸ்ரீ பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எஸ்.பி. ஜெயக்குமார், கோட்டாட்சியர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

News May 20, 2024

நீலகிரி மாவட்ட நீதிபதிக்கு பிரிவு உபச்சார விழா

image

நீலகிரி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் , மாவட்ட நீதிபதி ஆர். ஸ்ரீதரன்  பணியிட மாறுதலாகி செல்கிறார். அதை முன்னிட்டு உதகையில் ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் நீலகிரி விடியல் தன்னார்வ அமைப்பு சார்பில் நீதிபதி ஆர்.ஸ்ரீதருக்கு பிரிவு உபச்சார விழா இன்று நடைபெற்றது . மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர்  தமிழ் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நீதிபதி ஸ்ரீதருக்கு பொன்னாடை அணிவித்து
கெளரவிக்கப்பட்டார்.

News May 20, 2024

விருதுநகரில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு

image

விருதுநகரில் நாளை (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி விருதுநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

மதுரையில் 52 பேருக்கு பாதிப்பு

image

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 52 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதித்துள்ளதால் அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 20, 2024

சவுக்கு சங்கரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

image

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு தேனி மாவட்ட PC பட்டி போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தேனி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

News May 20, 2024

மதுரை: மாநகராட்சிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

மதுரையில் குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் உள்ள 55 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிறப்பு சான்றிதழ் வழங்க தாமதிப்பதாக மதுரை கிரேஸ் கென்னட் மழலை இல்லம் சார்பில் சாமுவேல் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில் மதுரை மாநகராட்சி எவ்விதமான காலதாமதமும் இன்றி 55 குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

error: Content is protected !!