Tamilnadu

News May 20, 2024

அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்க கமிட்டி ரெடி – கலெக்டர்.

image

மாநகராட்சி, காவல்துறை, மின்வாரியம் உள்ளிட்ட பல துறை அதிகாரிகளை அழைத்த கோவை கலெக்டர் கிராந்திகுமார் கடந்த வாரம் ஆலோசனை நடத்தி அனுமதியற்ற கட்டிடங்களை இடிக்க கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி அனுமதியற்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான உயர்மட்டக்குழு விரைவில் அமைக்கப்படவுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து இந்த குழு தன் பணியைத் துவக்கும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 20, 2024

தூத்துக்குடி அருகே விபத்தில் ஒருவர் பலி

image

ஸ்ரீவைகுண்டம் திருப்புளியங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த 15ஆம் தேதி தூத்துக்குடி மில்லர்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 20, 2024

தேனியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு!

image

தேனி மாவட்டத்திற்கு நாளை (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, தேனியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனியின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 20, 2024

சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

image

ஆவடி அருகே காட்டூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் சுரேஷ் (50), முரளி கிருஷ்ணன் (43) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று நிறுவனத்தில் உள்ள கிரேன்களை பழுது பார்க்கும் போது ஏர் சிலிண்டர் வெடித்து சிதறியதில் சுரேஷ், முரளி கிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் ஆவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 20, 2024

வாகனங்கள் நிறுத்த 9 இடங்கள் தேர்வு

image

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 47- வது கோடைவிழா வரும் மே 22- ஆம் தேதி துவங்குவதையொட்டி , 7 இடங்களில் 4 சக்கர வாகனங்களை நிறுத்தவும், 2 இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 15 இடங்களில் மொபைல் டாய்லெட்கள் வைக்கப்படுகிறது. மேலும் மலைப்பகுதியில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாக சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News May 20, 2024

காரைக்கால் : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

காரைக்காலில் ஓரிரு இடங்களில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காரைக்காலில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

திருவாரூர்: நாளை மழைக்கு வாய்ப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவாரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

நாகை : நாளை மழைக்கு வாய்ப்பு!

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 20, 2024

கோவை: 70 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கோவை எஸ்பி அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த மே.1 முதல் மாவட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 பேர் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து இதுவரை 70.710 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

நெல்லை : நாளை கனமழைக்கு வாய்ப்பு!

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

error: Content is protected !!