India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இயற்கை அழகை கண்டு ரசிக்க வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். விடுதியில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேரத்தில் வனவிலங்குகளை காணலாம் என்று ஆசையில் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்தால் வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி, சுற்றுலா பயணிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் TNPSC GROUP 1 போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு துவக்க விழா நாளை (22.05.2024) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இவ்வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் 04172 – 291400/ 9499055897 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அரவக்குறிச்சியிலிருந்து பழனி செல்லும் சாலையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் விபத்துகள் நேரிட்டு வருகின்றன. எனவே, குழாய் பதிக்கும் பணியை பள்ளிகள் திறக்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

பெருந்துறையை அடுத்த சரளை, பொன்முடி பகுதியில் நேற்று மாலை பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள ஓடையின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள 45 வீடுகள் கொண்ட குடியிருப்பில் 17 வீடுகளுக்குள் முழுவதுமாக தண்ணீர் புகுந்தது. பின்னர் விரைந்து வந்த வருவாய்துறையினர் பொதுமக்களை மீட்டு அரசு பள்ளிகளில் தங்க வைத்தனர். பின் ஜேசிபி மூலம் இரவில் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

பூந்தமல்லி அருகே ராமாபுரம் பிரதான சாலையில் நடந்துசென்ற வாலிபரிடம் மர்ம நபர் கத்தியை காட்டி பணத்தை பறித்துச் சென்றார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ராமாபுரம், ஆண்டவன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (44) என்பவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன குறிப்பிடத்தக்கது.

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் 11 நாள் மலர் கண்காட்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலர் கண்காட்சி இன்றுமுதல் மே 26ஆம் தேதிவரை 6 நாள்கள் நடைபெறும் என்று தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மலர்காட்சி நுழைவு கட்டணம் ஏற்கெனவே நிர்ணயம் செய்தவாறு பெரியவர்களுக்கு ரூ.125, சிறுவர்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி 3வது வார்டு பகுதியில் உள்ள மாறாங்குளத்தை தூர்வார ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் மாறாங்குளத்தில் இருந்து அளவுக்கு அதிகமான மண்ணை அள்ளி சென்று விட்டார். இதை எதிர்த்து 5-வது வார்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி சசி என்பவர் மண் அள்ளி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (மே-20) தொடர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் ஜெகஜீவன் தெருவில் வசித்துவரும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். சரிவர காது கேட்காத சண்முகம் நேற்று (மே 20) மாலை பஜாருக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவளத்தை கடந்தபோது, செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்குச் சென்றுகொண்டிருந்த அதிவேக ரயில் அவர் மீது மோதியதில் அவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதுகுளத்தூர் அருகே வடக்கூரைச் சேர்ந்தவர் முருகன் (55), தச்சுத் தொழிலாளி. இவர் நேற்று (மே 20) மதியம் தன்னுடன் வேலை செய்வோருக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு, முதுகுளத்தூர் – தேரிருவேலி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, இரு சக்கர வாகனத்தை முந்த முயன்றபோது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

குடியாத்தம் கொண்டசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (65), சலவை தொழிலாளி. இவர் 2 நாள்களுக்கு முன்பு குடியாத்தம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் கிருஷ்ணன் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 20) உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.