Tamilnadu

News May 21, 2024

லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா

image

புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நாளை நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, காலை 10 மணிக்கு 11 நரசிம்மர் உற்சவர்களுக்கு பால் தயிர், இளநீர் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 7 மணியளவில், 11 நரசிம்மர்களும் தேரில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

News May 21, 2024

சென்னை: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று(மே 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வெப்பம் தணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

செங்கல்பட்டு: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று(மே 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வெப்பம் தணிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று (21.5.24) அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது 10 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

ரெட் அலர்ட் நீங்கி தொடரும் மஞ்சள் எச்சரிக்கை

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மீட்பு படைகளும் வரவழைக்கப்பட்டன. நேற்று மாவட்ட பகுதிகளில் கனமழை இல்லை. இதனால் ரெட் அலர்ட் நீங்கியது. இருப்பினும் மஞ்சள் அலர்ட் தொடர்கிறது.

News May 21, 2024

 38 சக்கர நாற்காலிகள் வழங்கல்

image

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் (CSR)நாகர்கோவில் மாநகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் ஸ்பான்சர் செய்துள்ளது. வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார், PD&RM துறை ராஜா, திருவனந்தபுரம் மண்டல மேலாளர் ராம்குமார், மார்க்கெட்டிங் அலுவலர் சிவசங்கர், நாகர்கோவில் கிளை மேலாளர்,தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் வழங்கினார்.

News May 21, 2024

சிவகங்கை: மாணவர்களுடன் கலந்துரையாடல்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி நிறுவனத்திற்கு சிவகங்கை முன்னாள் எம்பியும் முன்னாள் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் கல்லூரிக்கு வருகை புரிந்தார். பின்னர் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் வேளாண்மை குறித்து கலந்து உரையாடினார்.

News May 21, 2024

புத்துயிர் பெரும் திண்டுக்கல் பூட்டு!

image

திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதை அடுத்து உலகம் முழுவதிலும் இருந்து திண்டுக்கல் பூட்டுக்கு ஆர்டர்கள் குவிவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆட்கள் தேவை அதிகம் இருப்பதால் இளைஞர்கள் பூட்டுத் தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். வரும் தலைமுறை இளைஞர்கள் பூட்டுத்தொழிலை ஆர்வம் எடுத்து செய்து திண்டுக்கல் பெருமையை நிலைநாட்ட வேண்டும் எனவும் பேசப்படுகிறது.

News May 21, 2024

குமரிக்கு வருகை தந்த தமிழக அமைச்சர்

image

குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேற்று குமரி மாவட்டம் வருகை தந்தார். வருகை தந்த போக்குவரத்து துறை அமைச்சரை முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜன் அன்புடன் வரவேற்றார். நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

News May 21, 2024

டெங்கு தடுப்பு பணிக்காக 800 பேர் நியமனம்

image

கோவை மாநகரில் டெங்கு தடுப்பு பணிக்கு 800 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில். மாநகரில் பழைய டயர்கள், உடைந்த தொட்டிகள், மற்றும் பழைய பொருட்களில் தேங்கிய நீரில், டெங்கு கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் பணியில் இப்பணியாளர்கள் ஈடுபடுவார்கள் எனவும், இதற்காக 800 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

error: Content is protected !!