Tamilnadu

News May 21, 2024

தாம்பரம்: ரூ.44.40 கோடியில் பணிகள் விரைவில்

image

புறநகரில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன் உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை உடையது. மாநகராட்சிக்கான கட்டடம் இல்லாததால், தாம்பரம் நகராட்சி செயல்பட்டு வந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பணிகளுக்காக வரும் மக்கள், இயற்கை உபாதைகளை கழிக்கவோ, வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.அந்த இடத்தில் மூன்று மாடி கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

News May 21, 2024

பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் கலெக்டரிடம் மனு

image

திருப்பூர் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில், தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் மீதான தாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் ஊழியர் பற்றாக்குறையை போக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

செங்கல்பட்டு மழைக்கு வாய்ப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

image

தமிழ்நாட்டில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் ஆளுநர் மாளிகையில் வழக்கமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி சென்றுள்ளார். அவர் சொந்த வேலையாக டெல்லி சென்றுள்ளதாகவும், நாளை (மே.22) சென்னைக்கு திரும்பி விடுவார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

News May 21, 2024

கொலையாளிகளை நெருங்கும் தனிப்படை

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று தீபக் ராஜா (34) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டப் பகலில் நடந்த இந்த கொடூர கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 7 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் தேடி வரும் நிலையில் இன்று (மே 21) போலீசார் கொலையாளிகளை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

News May 21, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழை பொழிவு விவரம்

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை மழைப்பொழிவு விவரம்: பாபநாசத்தில் 47 மில்லி மீட்டரும், கும்பகோணத்தில் 6 மில்லி மீட்டரும், வல்லத்தில் 7 மி.மீட்டரும், ஈச்சன்விடுதியில் 29 மி.மீட்டரும், குருங்குளத்தில் 54 மி.மீட்டரும், பட்டுக்கோட்டையில் 10 மி.மீட்டரும், அயன்குடி பகுதியில் 54.4 மி.மீட்டரும் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 21, 2024

நெல்லையில் ரெட் அலர்ட் வாபஸ்

image

தமிழகத்தில் தென் தமிழக கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்றும், நாளையும் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் இன்று காலை தெரிவித்துள்ளது.

News May 21, 2024

பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு

image

பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன வசதிகளுடன் கட்டமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.823 கோடி ஒதுக்கியுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

News May 21, 2024

கிருஷ்ணகிரி: டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்

image

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் கொத்துக் கொத்தாக டன் கணக்கில் மீன்கள் நேற்று செத்து மிதந்தன. தென்பெண்ணை ஆற்றில் மழைத் தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால்தான் மீன்கள் செத்து மிதக்கின்றன என்று மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தும் இறந்த மீன்களை மீன்வளத்துறையினர் அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News May 21, 2024

ஆர்பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

image

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மற்றும் பூ மார்க்கெட் சுகாதார வசதிகளின்றி நோய் பரப்பும் தளமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசு இந்த 3 ஆண்டு சாதனையாக மதுரையின் அடையாளமாக சொல்லப்படும் கலைஞர் நூலகம் சிறு மழைக்கே தாங்காத நிலையில் உள்ளதாக மழை நீர் புகுந்த புகைப்பட ஆதாரத்தை காட்டி விமர்சித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!