Tamilnadu

News May 21, 2024

விழுப்புரம் அருகே மூதாட்டி கழுத்து அறுத்து கொலை

image

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையத்தில் இருளர் காலனி குடியிருப்பில் வசித்துவந்த சின்னத்தம்பி என்பவரது மனைவி சகுந்தலா (72). இந்நிலையில் சகுந்தலா நள்ளிரவில் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். மேலும், அவர் அணிந்திருந்த தலா 1 பவுன் செயின், மூக்குத்தி பறிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி, இந்தக் கொலை நகைக்காக நடந்ததா? வேற ஏதாவது காரணமா? என விசாரித்துவருகின்றனர்.

News May 21, 2024

நீலகிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

image

கூடலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கேரளா நோக்கி செல்லும்பாண்டியாறு-புன்னம்புழா ஆறுகளில் கலப்பதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு துறை ஒருங்கிணைந்து மீட்பு பணியினை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அங்கு செல்லக் கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

திருவள்ளூர்: தந்தையை குத்திக் கொன்ற மகன்

image

பூந்தமல்லி அருகே திருமழிசையைச் சேர்ந்தவர் பாபு (49), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களது மகன் தமிழரசன் (24). நேற்றிரவு பாபு வேலை முடித்து குடிபோதையில் வீட்டுக்கு வந்ததை, மனைவி தேவி கண்டித்துள்ளார். அப்போது பாபு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால், கோபம் அடைந்த மகன் தமிழரசன் கத்தியால் பாபுவை குத்திக் கொலை செய்தார். வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து தமிழரசனை இன்று காலை கைது செய்தனர்.

News May 21, 2024

வேலூர்: அடிக்கடி மின் துண்டிப்பு

image

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், இல்லத்தரசிகள் மின் துண்டிப்பை கண்டித்து வேதனை தெரிவித்து வருகின்றனர். மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்து மின் துண்டிப்புக்கான காரணத்தை கண்டறிந்து பொதுமக்களுக்கு உரிய தகவலை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மின் துண்டிப்புகள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

திருவள்ளூர் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம்

image

நெல்லை மாவட்டம் பிரதான அணைகளின் நீர்மட்ட நிலவரம் இன்று காலை 143 அடி உச்சநீர் மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.10 அடி,156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 63.81 அடியாக உள்ளது.118 அடி உச்சநீர் மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.20 அடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது.

News May 21, 2024

தி.மலை: மாமியார் கொலை – மருமகளுக்கு ஆயுள் தண்டனை

image

திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த ஆதிலட்சுமியை கூலிப்படை வைத்து அவரது மருமகள் கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் மருமகள் சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும், சத்யாவின் அண்ணன் பிரபு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், சரண்,பத்ரிநாராயணன், முகமது அலி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட் நீதிபதி சுஜாதா தீர்ப்பளித்துள்ளார்.

News May 21, 2024

கடலூர் மழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 21, 2024

குலதெய்வ கோவிலில் நடிகர் கவுதம் கார்த்திக் வழிபாடு

image

புகழ்பெற்ற நடிகர் ஆர்.முத்துராமன், நடிகர் கார்த்திக் ஆகியோரின் பூர்வீகம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் ஆகும். நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் நேற்று ஒக்கநாடு மேலையூருக்கு வந்தார். அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நடிகர் கவுதம் கார்த்திக் அங்குள்ள அவர்களது குலதெய்வ கோவிலான மெய் சொல்லும் பெருமாள் பட்டவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

News May 21, 2024

நாட்டறம்பள்ளி அருகே கார் மோதி விபத்து

image

நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி அருகே ஓசூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது பின்னால் வந்த கார் மோதியதில் காரில் பயணம் செய்த உஷா மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால், அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!