Tamilnadu

News May 21, 2024

நாகை: 32 சவரன் நகை மீட்பு

image

நாகை அடுத்த நாகூர் நூல்கடைத் தெருவைச் சேர்ந்த தாவூது பாத்திமா நாச்சியார் வீட்டில் கடந்த 8 ஆம் தேதி காணாமல்போன 32 சவரன் தங்க நகைகள் இன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஜெகபர் சாதிக் கைது செய்யப்பட்டு அவர் திருடிச் சென்ற தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News May 21, 2024

மதுரை மேலூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

image

மதுரை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய பட்ட போக்சோ வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் கோர்ட்டில் ஆரம்பமாகவில்லை. இதைத் தொடர்ந்து இன்று நீதிபதி கோபிநாத் விசாரணைக்கு சாட்சி அளிக்க வராத இன்ஸ்பெக்டர் ராதாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

News May 21, 2024

மயிலாடுதுறை: குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

image

மயிலாடுதுறை பகுதிகளில் மதுவிலக்கு குற்றத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்ட பாபு என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News May 21, 2024

பழங்குடி இன மாணவர்கள் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஒன்றிய அரசின் பழங்குடிஇன அமைச்சகத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு (PhD) மற்றும் முனைவர் பட்டப்படிப்பை National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் இனையவழியில்  விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News May 21, 2024

ராமநாதபுரத்தில் 10 செ.மீ மழைப்பதிவு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தொண்டியில் 10 செ.மீட்டரும், தீர்த்தாண்டதானம் பகுதியில் 8 செ.மீட்டரும், வட்டானம் பகுதியில் 7 செ.மீட்டரும், திருவாடானை பகுதியில் 4 செ.மீட்டரும், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 21, 2024

காஞ்சிபுரம்: போக்குவரத்து மாற்றம்

image

அருள்மிகு தேவராஜசுவாமி உற்சவத்தை முன்னிட்டு நாளை 22.05.24 கருடசேவை மற்றும் 26.5.2024 இன்று திருத்தேர் வீதி உலா வருவதால் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒலி முகமது பேட்டை, புதிய ரயில் நிலையம், பழைய ரயில் நிலையம்,ஓரிக்கை, மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.

News May 21, 2024

புதுக்கோட்டையில் 10 செ.மீ மழைப்பதிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விராலிமலை பகுதியில் 10 செ.மீட்டரும், இலுப்பூர், காரையூர் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும் அன்னவாசல், குடிமியான்மலை ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும் ஆயிங்குடி, உடையாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் ஆலங்குடியில் 4 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 21, 2024

திருச்சியில் 13 செ.மீ மழைப்பதிவு

image

திருச்சியில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி விமானநிலையத்தில் 13 செ.மீ, சமயபுரத்தில் 12 செ.மீ, திருச்சி ரயில்நிலையத்தில் 8 செ.மீ, மணப்பாறை, திருச்சி நகரம், வத்தலை அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் 7 செ.மீ சிறுகமணி KVK AWS, கல்லக்குடி ஆகிய பகுதிகளில் 6 செ.மீ, முசிறி, துவாக்குடி IMTI, பொன்மலை ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் மழைப் பதிவானது.

News May 21, 2024

அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு நேற்று இரவு ஒருவர் தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எண்ணை வைத்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்ததில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கேசவன் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கேசவன் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர் என்பது தெரிந்தது.

News May 21, 2024

கரூரில் 13 செ.மீ மழைப்பதிவு

image

கரூர் மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூர் நகர்பகுதியில் 13 செ.மீட்டரும், பஞ்சம்பட்டி பகுதியில் 10 செ.மீட்டரும், குளித்தலை, கடவூர் ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும் மாயனூரில் 5 செ.மீட்டரும் மயிலம்பட்டியில் 3செ.மீட்டரும் அரவக்குறிச்சி, தோகைமலை ஆகிய பகுதிகளில் 2செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

error: Content is protected !!