India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் பொதுமக்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலையங்களிலும் தங்கள் சரகத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா ஜூன் 11 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பெருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் சேலம்-சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு ரயில் வண்டி ஆனது மேல்நாரியப்பனூர் ரயில்வே நிலையத்தில் ஜூன் 11,12,13,14 ஆகிய தேதிகளில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

வடபழனி பக்தவச்சலம் முதல் தெருவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மூத்த மகள் மதுமிதா (15). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருக்கிறார். இந்நிலையில், இவர் வீட்டில் செல்போனை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் ஆறுமுகம் மகளை கண்டித்துள்ளார். இதனால் மனவருத்தமடைந்த சிறுமி நேற்று காலை பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோத்தகிரியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டுக்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ள பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவ, மாணவிகள் www.tnscert.org என்ற இணையதளத்தில் மே 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் அருகே முத்துவிஜயபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய பிரபாகர் மனைவி உமா, மூத்த மகளுடன் வசித்து வந்தார். மாமனார் சேதுவுக்கும், உமாவிற்கும் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. உமா கடந்த மே 20 பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார் என சேது தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையில் சேது தூங்கிக் கொண்டிருந்த உமா மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார் என்பது தெரியவந்தது. இன்று சேது கைது செய்யப்பட்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரகம் கூட்டாறு காப்புக்காட்டில் வனசரகர் பழனிவேல் தலைமையில் வனத்துறையினர் இன்றுரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கரியமலை (50)என்பவர் மானை வேட்டையாடி கறி வைத்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில், அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். மேலும் தப்பி ஓடிய அறிவழகன், அமானுல்லா ஆகிய இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்கிற இணைய தளத்தில் வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலக்கோட்டையை அடுத்த விருவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து(35) என்பவரை கடந்த 3 ஆம் தேதி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் இவரது குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வால்பாறை அடுத்த மளுக்குபாறையில் இருந்து
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் நேற்று (மே25 ) சாலையில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதை கண்ட சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாலக்குடி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்தவோ வனவிலங்குகளை போட்டோ எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டை அடுத்த அண்ணாவட்டம் பகுதியைச் சார்ந்தவர் ராஜேந்திரன் (65). இவர் 5 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல இன்று தனது மாட்டிற்கு மாட்டு தீவனம் கொடுத்தார். அதை சாப்பிட்ட 5 மாடுகள் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்தது. இது குறித்து ராஜேந்திரன் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.