India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் 2023 ஜனவரி முதல் 2024 ஏப்ரல் வரை 72 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தில் இருந்த 18 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும் இந்த திருத்தலத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை டி ஆர் டி ஒ செயலாளர் சதீஷ் ரெட்டி இன்று நண்பகல் முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் உற்சவர் சண்முகர் ,முருகர் ,மூலவர் முருகர் வள்ளி தெய்வானை சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அப்போது அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் சிறு பட்டாசு ஆலைகளை குறிவைத்து பட்டாசு விதிமீறல் ஆய்வு குழுக்கள் ஆய்வு நடத்தப்பட்டு வருவதை கண்டித்து தமிழக பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 150 பட்டாசு ஆலைகளை மூட முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்தவர் தி.மு.க பிரமுகர் மாயாண்டி ஜோசப். இவர் மதுபானக்கடை அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றுள்ளனர். போலீசார் அவரது உடலை சற்றுமுன் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம்’ என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பண்டங்களை லாபநோக்கில் விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்ட வழக்கில் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை யாரும் உரிமை கோராததால் ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி உள்ள வாகனங்கள் தங்களுடையது என்று கருதினால் அசல் ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலகத்தை அனுக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாளவாடி அடுத்த கரளவாடி கிராமத்தில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் முட்டைகோஸ் பயிரிட்டுள்ளார். இன்று தோட்டத்திற்குள் புகுந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாரான முட்டைகோஸ் பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் கவலை அடைந்த குமாரசாமி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரத்தி – திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில் கூட்டுச்சாலை பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இது தற்போது உரிய பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுவாணி, அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணையில் கடந்த 10 நாட்களாக மழைப்பொழிவு உள்ளதால் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் குடிநீர் வினியோக கால இடைவெளியையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கோவை மாநகரில் குடிநீரை சிக்கனமாகவும், குடிநீர் அல்லாத உபயோகத்துக்கு நிலத்தடி நீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.

அரியலூர் வன துறை அலுவலகத்தில் உயிரியல் பன்முகத்தன்மை தினத்தையொட்டி வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் வனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வனங்களின் பசுமைப் போர்வை தட்ப வெப்பநிலையை சீராக வைப்பதுடன் மழை பெய்ய முக்கிய காரணமாகவும் அமைகின்றது. எனவே நம்மால் இயன்ற அளவுக்கு உயிரியல் பன்முகத்தன்மையை பேணி பாதுகாக்க வேண்டும் என்றார்
Sorry, no posts matched your criteria.