India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பூம்பாறை, கொடைக்கானல் ஏரியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மலைப்பூண்டு விவசாயத்தில் புகழ்பெற்ற இந்த பூம்பாறை கிராமம் பழனி மலையின் ஒரு பகுதியாகும். இது 1920 மீ உயரத்தில் அடுக்கடுக்கான வயல்களுக்கும் பசுமைக்கும் மத்தியில் அமைந்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான புராணக் கதைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் குழந்தை வேலப்பர் கோயில் இங்கு அமைந்துள்ளது சிறப்பாகும். இயற்கையின் அமைதியை இங்கு காணலாம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள மஞ்சுனேஷ்வர அய்யனாரப்பன் கோயிலைச் சுற்றியுள்ள காட்டினை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மே 24) அரசு பள்ளிகளில் 9 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மன வளக்கலை மற்றும் யோகா பயிற்சி வழங்குவது தொடர்பாக ஸ்கை யோகா ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அருள்ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கோவையில் வசித்தவர் இந்திராணி. இவர் பிசி பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். சித்தபிரமை நோயால் அவதிப்பட்ட இவர் 17ம் தேதி வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெளியேறி மர்மமான முறையில் அல்லிநகரம் பைபாஸில் தலையில் அடிபட்ட நிலையில் கிடந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து கோவையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கரூர் மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் நகராட்சி சாலையில் வசித்து வருபவர் மூதாட்டி நளினா(62). மூதாட்டி தற்பொழுது யாரும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மூதாட்டிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அவரை அக்கம்பக்கத்தினர் மீது அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பஜார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி – ஆம்பூர் சாலையில் உள்ள டீக்கடையில் குடிபோதையில் இருந்த குணா என்பவர் சிகரெட் கேட்டுள்ளார். டீ கடைக்காரர் தர மறுக்கவே, வாய் சண்டை கைலப்பாகி டீக்கடைக்காரரின் கழுதை அறுத்துவிட்டு குணா தப்ப முயன்றுள்ளார். அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில், டீ கடைக்கு எதிரே உள்ள சாலையோரத்தில் வசிப்பவர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் துறைமுகத்தில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் கூண்டை துறைமுக அதிகாரிகள் இன்று ஏற்றி உள்ளனர். இதனை அடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், அயலக தமிழர் நலவாரிய அடையாள அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். இதற்கான அனைத்து வசதிகளும், விளக்கங்களும் https://nrtamils.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பதிவு செய்பவர்களுக்கு 3 மாதம் பதிவு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.