India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசியில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், மத்திய அரசின் பங்களிப்போடு அமையவுள்ள கல்லூரிகளுக்கு 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காணுமாறு, மே 6 ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட 9 அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கோவை மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் வரும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கை, பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயா்வு கடந்த வாரம் ரூ.250-க்கு விற்ற 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.450-க்கும், ரூ.16-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.30-க்கும், ரூ.130-க்கு விற்ற பீன்ஸ் ரூ.175-க்கும் விற்பனையானது. சேனைக்கிழங்கு கிலோ ரூ.65, பந்தல் சுரைக்காய்- ரூ.20, பயிா் வகைகள் ரூ.30, சின்ன வெங்காயம்- ரூ.25 முதல் ரூ . 52 வரை விற்கப்பட்டன.

தென்காசி உட்பட 7 மாவட்டங்களில், இன்று (மே.24) காலை 10 மணி வரை ஓரிடு இடங்களில்மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை ஆரம்பித்தது முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தென் தமிழகம் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை ஆகியவைகள் நடந்தது. இந்த நிகழ்வை முன்னிட்டு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர் வலமாக வந்தனர்.

பந்தலூர் தாலுகா தேவாலா அட்டி ரேஷன் கடை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் பழனி (84) என்ற முதியவர் அதிகாலை 2 மணி அளவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி அவர் மரணம் அடைந்தார். இந்த விபத்துக் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திருவண்ணாமலையில் பழக்கடைகள் பலவற்றில் ஆய்வு செய்தபோது ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் மாம்பழங்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், கடையம் பகுதியில் விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவு திட்டமான ராமநதி, ஜம்புநதி மேல்பட்ட கால்வாய் திட்டப்பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. தற்போது கூடுதலாக 21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக இந்த பகுதி விவசாயிகள் தமிழக முதலமைச்சருக்கும்,திமுக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தனை அரசு அலுவலக பெயர் பலகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சார்நிலை கருவூலத்தில் விழுப்புரம் மாவட்டம் என பெயர் உள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.24) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.