Tamilnadu

News May 25, 2024

திருமயம் அருகே ஒருவர் பலி!

image

திருமயம் அருகே குருவிக்கொண்டான்பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணி(55). இவரது மனைவி லெட்சுமி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று குடும்பத்தகராறில் விஷம் குடித்து மயங்கி கிடந்த கல்யாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பனையபட்டி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 25, 2024

நாமக்கல் அருகே போக்குவரத்து பாதிப்பு 

image

குமாரபாளையம்- சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இந்த சாலைகளில் மாடுகள், குதிரைகள் என கால்நடைகள் பல இடங்களில், சாலைகளின் நடுவில் செல்வதால், வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News May 25, 2024

கடலூர்: தாறுமாறாக ஓடிய லாரி

image

கூடலூரிலிருந்து பண்ருட்டி பறை டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது வரக்கால்பட்டு பகுதியில் சென்றபோது டிப்பர் லாரியின் முன் சக்கரம் பஞ்சரானதால் லாரி தாறுமாறாக சாலையில் ஓடியது.அப்பொழுது டிரைவர் லாரியை நிறுத்த முற்பட்டார்.ஆனால் லாரி அங்கிருந்த டீக்கடை நோக்கி வந்தது.அப்பொழுது டிரைவர் சாமர்த்தியமாக லாரியை டீக்கடை முன்பு நிறுத்தினார்.

News May 25, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

இந்திய அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுக்கு விண்ணப்பபடிவம் மற்றும் இதர விபரங்களை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் அதே இணையதள முகவரியில் 31.05.2024 -க்குள் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News May 25, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை…!

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.25) 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 3 மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 25, 2024

கடலூர் புனித டேவிட் கோட்டை வரலாறு!

image

கடலூரில் அமைந்துள்ளது புனித டேவிட்கோட்டை, இந்த கோட்டை சோழ மண்டல கடற்கரையோரமாக அமைந்துள்ளது. செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன.

News May 25, 2024

சேலம் மாவட்டத்தில் குறைவாக பதிவான மழை

image

சேலம் மாவட்டத்தில் 2024 நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் மே 22 – ஆம் தேதி வரை சராசரியாக 161.47 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதைத்தொடர்ந்து மேலும் கடந்த 2023 – ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 63.01 மில்லி மீட்டர் அளவிற்கு மழை குறைந்துள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஐந்து நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

News May 25, 2024

திண்டுக்கல் அருகே விபத்தில் 6 பேர் படுகாயம்

image

பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு 12 பேருடன் சுற்றுலா சென்ற வாகனம் வேடசந்தூர் தம்மனம்பட்டி அருகே வந்த போது சேலத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் சுற்றுலா வாகனத்தில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர். அவர்களை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 25, 2024

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு பதிவு

image

வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை வந்தவாசி பழவேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார் . பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வந்தவாசி போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வருகின்றனர்.

News May 25, 2024

74 மது பாட்டில்கள் பறிமுதல் 9 பேர் கைது

image

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!