Tamilnadu

News May 24, 2024

கோவை: பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

image

கோவை பழங்குடியினர் நல இயக்குநரகம் மூலம் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை  பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது தற்போது, புதிய திட்டமாக வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது
எனவே, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள் https://overseas.tribal.gov.in/
மூலம் இணையவழியில்
விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் இன்று கூறினார்.

News May 24, 2024

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

2023-ம் வருடத்திற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மேற்காணும் இவ்விருதுக்கு விண்ணப்பம் இணையதள முகவரியான  http://awards.gov.in/ மூலம் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும் பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.05.2024ம் தேதிக்குள் இந்திய அரசுக்கு இணையதளத்திலேயே நேரடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று கூறினார்.

News May 24, 2024

மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பாராட்டு

image

அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடமும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாம் இடமும், 11ம் வகுப்பு தேர்வில் 5 இடமும் பெற்று சாதனை புரிந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு பல்வேறு வகையிலும் ஊக்கத்தை அளித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா வழங்கினார்.

News May 24, 2024

விருதுநகரில் 16 இரட்டை குழந்தைகள்

image

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 561 சுகப்பிரசவங்கள், 16 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2024 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 615 சுகப்பிரசவங்கள், 22 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2023 ஒப்பிடுகையில் கடந்த 4 மாதங்களில் 54 சுகப்பிரசவங்கள், 6 இரட்டை குழந்தைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

இரண்டு நாள் குடிநீர் “கட்” ஆகும் வார்டுகள் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகம் தாக்கரே ஞான தேவராவ் இன்று (மே 24) விடுத்துள்ள அறிக்கை: சுத்தமல்லி நீரேற்று நிலையத்தில் இருந்து மகிழ்ச்சி நகர் தரை தள நீர் தொட்டிக்கு வரும் பிரதான குழாய் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் மே 28, 29 ஆம் தேதிகளில் மேலப்பாளையம் மண்டலம் 40, 41, 42, மற்றும் 51 முதல் 55 வரையிலான வார்டு பகுதியில் குறைந்த அளவை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

சேலத்தில் வெயிலின் தாக்கம் 92.9 டி.கி.ரியாக பதிவாகியுள்ளது

image

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (மே.24) மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

News May 24, 2024

மாவட்ட இசைப்பள்ளியில் சேர்க்கை – ஆட்சியர் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட இசைப் பள்ளியில் ( 2024-25) ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியின் குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய பிரிவுகளில் சேர தமிழ் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். மற்ற பாடப்பிரிவுகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தகவலுக்கு 9443377570 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News May 24, 2024

பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 8 பேருக்கு ஜாமீன் ரத்து

image

சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக இருந்த குற்றச்சாட்டு காரணமாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பைச் சேர்ந்த 8 பேரின் உயர் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து 8 பேரும் சென்னையில் உள்ள ஐ.என்.ஏ அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களை ஐ.என்.ஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

News May 24, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (24/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

இர்பான் மீது ஏன் நடவடிக்கை இல்லை – ஜெயக்குமார்

image

யூடியூபர் இர்பான் தனது மனைவியின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இர்பான், உதயநிதிக்கு நெருங்கியவர் என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ஆனால், சாமானிய மக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருந்தால் கைது, குண்டாஸ் என வழக்கு மேல் வழக்கு போட்டிருப்பார்கள் ” என கூறினார்.

error: Content is protected !!