India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 54க்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியிணை இன்று மாநகராட்சி ஆணையர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, வார்டு எண் 65க்கு உட்பட்ட வயர்லெஸ் சாலையில் மின்கம்பி அமைப்பது சம்பந்தமாக இளநிலை பொறியாளர் அவர்களிடம் கலந்தாலோசித்து, மின்கம்பி அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.

செங்கல்பட்டில் உள்ள முட்டுக்காடு படகு குழாம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஒரு நீர் விளையாட்டு மையமாகும். இங்கு படகோட்டுதல், காற்றில் உலாவுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 1984ஆம் ஆண்டில் இந்தப் படகு வீடு திறந்து வைக்கப்பட்டது. இம்மையத்திற்கு ஒவ்வொரு வாரமும் 4,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

புதுச்சேரிக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் போலீசார் பழைய துறைமுக பகுதியில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டனர். அங்கு குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளையும் மதுபாட்டில்களை பாறையில் வீசி உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளவர்களை விரட்டியடித்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.

அரக்கோணம் அடுத்த அன்வர்த்திகான்பேட்டை இருளர் காலனியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினரான 18 வயது சிறுவனுக்கும் நாளை திருமணம் செய்து வைக்க பெரியோர்கள் திட்டமிட்டிருந்தனர். மாவட்ட சமூக பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் இன்று அரக்கோணம் தாலுகா போலீசார் மற்றும் சமூக நல அலுவலர் ஆகியோர் இணைந்து குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் ஏற்கனவே பெயர் சேர்க்கப்பட்டு 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு ஆதார் எண் பதிவேற்றம் செய்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் 30.6.2024-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகே நீடூர் பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையே மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதனிடையே இன்று மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் அதன் மீது படர்ந்திருந்த மரக்கிளைகளை முழுமையாக வெட்டி அகற்றினர்.

பாம்பன் அண்ணா நகர் சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழைநீர் இச்சாலையில் காணப்படும் குழிகளில் நிரம்பி வழிந்தோட வழியின்றி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி இச்சாலையை பாம்பன் ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காட்பாடியை சேர்ந்தவர் கதிர்வேல் (54). இவர் பேத்தி நேற்று (மே 24) வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் (30) என்பவரது நாய் சிறுமியை கடித்துள்ளது. இதுகுறித்து கதிர்வேல் ஸ்டீபனிடம் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ஸ்டீபன் கதிர்வேலை தாக்கியுள்ளார். இதுகுறித்து கதிர்வேல் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஸ்டீபனை கைது செய்தனர்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் பி.எம்.சி பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற மே 27 அன்று ஓசூர் பி.எம்.சி பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 400 மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் 1500 மேற்பட்ட காலிபணியிடங்களை நிரப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல் துறை இன்சூரன்ஸ் முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் செங்கல்பட்டு நகர், கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக செங்கல்பட்டு அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.