India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் விஜயகுமார். இவர் நெல்லை மாவட்டம் பாளை பெருமாள்புரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது டாக்டர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து இன்று திருநெல்வேலி டிஐஜி பிரவேஷ் குமார் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் விஷ்ணுபுரம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடத்தில் விழா இன்று நடைபெற்றது. காத்தவராயன் சுவாமியை தூக்கிக்கொண்டு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏடிஎஸ்பி, ஏஎஸ்பி, டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றங்கள் நடைபெறாமல் பணி மேற்கொள்ள எஸ்பி உத்தரவிட்டார்.

சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து ஹான்ஸ் விற்பனை செய்யும் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். பெட்டிக்கடைகளில் ஹான்ஸ் மற்றும் புகையிலை விற்றதாக கடந்த மாதத்தில் காவல்துறையால் போடப்பட்ட வழக்குகளில் இன்று விழுப்புரம் உணவு பாதுகாப்பு துறை சேர்ந்த சண்முகம் அவர்கள் சின்னசேலம் காவல்துறை உதவியுடன் கூகையூர் ரோடு, அண்ணாநகர் ரோடு ஆகிய 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

அயலகத் தமிழர் நல வாரியத்தில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீடு திட்டம், கல்வி உதவித்தொகை, திருமண உதவி திட்டங்களில் அயலகத் தமிழர்கள் பயன் பெறலாம். இதற்கு, https://nrtamils.tn.gov.in/en/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8003093793, 8069009901 என்ற எண்களில் தொடர்பு கொள்ள கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட முழுவதும் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது 20 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையினர் இதுகுறித்து தகவலை இன்று வெளியிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், வேலப்பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ பெருமாள் சுவாமி கோவிலில் இன்று சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்கள் கோயில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வைத்திருப்பவர்கள் மற்றும் சொத்தின் உரிமையாளர்கள் 2024 -2025ம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தினால், சொத்து வரியில் உடனடியாக 5 சதவீதம் தள்ளுபடியை ஊக்கத்தொகையாக பெற்றுக்கொள்ளலாம் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.25) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்து 1500 போலீஸார் ஈடுபடுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.