India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கீரம்பூா் புதுவலவு பகுதியை சோ்ந்தவா் விவசாயி அா்த்தநாரி (70).ஜங்கமநாய்க்கன்பட்டியில் உள்ள தனது உறவினரை பாா்ப்பதற்காக டூவீலரில் நேற்று முன்தினம் இரவு வரப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.ஒரு கோழிப்பண்ணை அருகே சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.அவரை அந்த வழியாக வந்தவா்கள் நாமக்கல் GH அனுப்பி வைத்தனர்.அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

கடலூர் மாநகர போக்குவரத்து போலீசார் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய ஒருவர், இருசக்கர வாகனத்தில் 3 பேராக அமர்ந்து சென்ற 21 பேர் உள்ளிட்ட 112 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மணி (65).கூலி வேலை செய்து வந்த மணி ஹோட்டலில் சாப்பிடுவதற்காக திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது ஜீவா லாட்ஜ் எதிரே அவ்வழியாக வந்த பைக் எதிர்பாராத விதமாக மோதி மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து டவுன் போலீசார் நேற்று விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தென்காசி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் தென்காசி சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் வருகிற 30-ஆம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது என தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் இன்று தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு ,உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

மயிலாடுதுறையில் தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பில் மயிலாடுதுறை சிநேகிதிகளின் ஆஹா கொண்டாட்டம் என்ற நிகழ்வு நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள பொன்னாக்குடி பாலத்தின் மீது நெல்லையில் இருந்து இன்று (மே 27) நாகர்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கரன்கோவிலை சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கபிலேஸ்வரன் (22) ஆகிய இருவரும் 4 வழிச்சாலையில் உள்ள பாலத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 16 நாள் மலர் கண் காட்சியை 2.50 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். 13 நாள் ரோஜா கண்காட்சியை 1.10 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற 3 நாள் பழக்கண்காட்சியை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். இந்த விழாக்களுடன் நீலகிரி கோடை விழா முடிவடைந்தது.

மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளதாக நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வீரசக்தி, கமலக்கண்ணன் உள்பட 20க்கும் மேற்பட்டோரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர் கம்பம் தனுஷை தேனி மாவட்டத்தில் வைத்து கைது செய்து(மே 26) மதுரை அழைத்து வந்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா, ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் எழுவங்கோட்டை செல்லும் சாலையை கடக்க முயன்ற பனந்தோப்பு சபரிமுத்து என்பவர் மீது வாகன மோதி உயிரிழந்தார். அதேபோல் நல்லாங்குடி விளக்கு அருகே மாவிடுத்திகோட்டையை சேர்ந்த குப்புசாமி என்பவரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவரும் சம்பவ இடத்தில் பலியானார். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மரண வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூலம் கடிதத்தில் கூறிய அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் இன்று தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.