India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 480 சகிமீ பரப்பளவில் அமைந்துள்ளது வனவிலங்கு சரணாலயம். இது அதிக அளவில் சாம்பல் நிற அணிகள் வாழ்ந்து வருகின்றன. அதனால் இந்த சரணாலயம் சாம்பல் நிற அல்லது நரைத்த அணில்கள் சரணாலயம் என்றும் அழைக்கப்பட்டு வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகிறது. இந்த பகுதியில் அணில்கள் மட்டுமின்றி யானை, புலி,வேங்கைப்புலி, சிறுத்தை, வரையாடு, தேவாங்கு போன்ற விலங்குகளும் வசிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலை ஏ.பி.சி.டி. என தரம் வாரியாக பட்டியலிட்டு கண்காணிக்க தென் மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டார். அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மேற்பார்வையில் ரவுடிகள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகிறனர். இதனால், குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கடந்த வாரம் வெட்டி கொலை செய்யப்பட்ட தீபக்ராஜாவின் உடல் இன்று (மே 27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல், போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. இதனையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

புதுவை நகரின் மிக முக்கிய வீதியான காந்தி வீதி, நேரு வீதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. இங்கு
குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைப்பதால்,
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் உள்ளூர் & வெளியூர் பகுதியில் குழந்தைகளுக்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று(மே 26) மக்கள் குவிந்ததால் மார்கெட்டில் கூட்டம் அலைமோதியது.

பருவதமலை, கடலாடி தென்மகாதேவமங்கலம் கிராமங்களையொட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இந்த மலை நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை என்று அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இந்த மலையின்மேல் அமைந்துள்ள மல்லிகார்ஜுனர் கோயில் கிபி 3ஆம் நூற்றாண்டில் குறுநிலமன்னனான நன்னன் கட்டியதாக இக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கிழக்கு தாம்பரம், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் நித்யசுபா (49). தனது மகள் படிக்கும், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று கட்டணம் செலுத்தி, வீட்டிற்கு திரும்பினார்.
ஆஞ்சநேயர் கோயில் தெருவில் நடந்து சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், நித்யசுபா அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினார். இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை, செய்தியாக Way2news-ல் பதிவிட்டு வருமானம் ஈட்டுங்கள். பகுதி நேர வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. எங்கள் தொடர்பு எண்: 9642422022

திருச்சி தேவதானம் ரயில்வே கேட் அருகில் நேற்று மாலை அம்மு,வளர்மதி ஆகிய இரு பெண்கள் அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று உயிருடன் இருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 14.99. 15.09,அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 44.97 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 58.25அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 12.4 அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 16. 2அடி நீரும் இருப்பு உள்ளது.

திருவாரூர், வலங்கைமான் வெட்டாற்றில் மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று(மே 26) போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது, மணல் திருட்டில் ஈடுபட்ட பாடகச்சேரியை சேர்ந்த முத்துராமன் மற்றும் மற்றொரு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட ஊத்துக்காட்டை சேர்ந்த ராஜசேகரன் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். 2 லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்து, தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
Sorry, no posts matched your criteria.