India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்வி தொடரும் தகுதியுடைய மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரியில் உள்ள புதுமைப்பெண் திட்ட பொறுப்பு அலுவலர்களிடம் தங்களது விவரங்களை பதிவு செய்து திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக்கொண்டார்

சேலம் பெரியபுதூரை சேர்ந்தவர் சக்திகுமார். இவரது மனைவி பூஜாகுமாரி (29). ஒடிசாவைச்
சேர்ந்த இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலம் வந்தனர். இவர்களுக்கு 7வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்றுமுன் தினம் சாப்பிட்டு படுத்த சிறுமிக்கு நள்ளிரவு மூக்கில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று டெங்கு நோய் தடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது – சுகாதாரத்துறை மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராம வாரியம் சார்பில் காதி கிராப்ட் பொருள்கள் விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் காதி கிராப்ட் பொருட்களான தேன் இயற்கை சோப்பு பவுடர் வாசனை திரவியங்கள் இடம்பெற்றுள்ளன.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வள்ளியரச்சல் கிராம பகுதிகளில் திமுக கட்சி நிர்வாகிகளிடம், பொதுமக்களின் கோரிக்கை மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடந்து வந்தன. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நத்தக்காடையூர் கேஜிஐ கல்லூரி அணி முதலிடமும், அணைப்பதி ஐகே அணி 2ம் இடமும், அங்கேரிபாளையம் 7 பிரதர்ஸ் அணி 3ம் இடமும் பிடித்தன.

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவான இது 2014-ம் ஆண்டு காவிரி ஆற்றின் கரையில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த பூங்கா, வண்ணத்துப்பூச்சி இனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதன் எண்ணிக்கையை பெருக்கவும் ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. இது வெப்ப மண்டல வண்ணத்துப்பூச்சி காப்பகமாகவும் உள்ளது.

சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் பழனி மகாலில் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து காவலர்களுக்கு Emergency Day விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில் விபத்து ஏற்படும்போது காவல்துறையினர் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக தனியார் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் தலைமையிலான குழுவினர் காவல் துறையினருக்கு CPR உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 834 ரேஷன் கடைகளுக்கு புதிய பிஓஎஸ் கருவி மற்றும் கருவிழி ஸ்கேன் செய்யும் கருவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் 112 ரேஷன் கடைகளுக்கு சோதனை அடிப்படையில் பயன்படுத்தும் வகையில் புதிய பிஓஎஸ் கருவி மற்றும் கருவிழி ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 722 கருவிகள் வழங்கும் பணியானது தொடங்கி உள்ளது.

கடலூரில் அமைந்துள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது. 6ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த இக்கோயில் சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர அரசுகள் என பலரால் கட்டப்பட்டது. இந்த குறிப்புகள் இக்கோயிலில் கண்டறியப்பட்ட 50 கல்வெட்டுகளிடமிருந்து பெறப்பட்டவை. இவ்விறைவன் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். மணவாள மாமுனிகளாலும் இத்தலம் பாடல்பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.