Tamilnadu

News May 27, 2024

பாலியல் வழக்கில் ஒருவருக்கு குண்டாஸ்

image

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, கோவிலூர் பகுதியில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பாலு பாரதி (46). இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் இன்று இவரை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பாலு பாரதி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News May 27, 2024

செங்கல்பட்டு மகாபலிபுரம் கோயில் குறிப்பு!

image

செங்கல்பட்டிலுள்ள மகாபலிபுரம் இருக்கும் இடம், பல்லவர் காலத்தில் முக்கிய துறைமுகமாக செயல்பட்டு வந்த நகரமாகும். இங்குள்ள நினைவுச் சின்னங்கள், திராவிட மற்றும் பல்லவர் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இங்கு செதுக்கப்பட்ட குகைகள், ஒற்றைக்கல் ரதங்கள், கோயில்கள் சிற்பங்கள் கலைநயத்துடன் அமைந்துள்ளது. இதில் புராண அத்தியாயங்கள் இதிகாசங்களைத் தழுவி சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.

News May 27, 2024

மேலூர் அரசு கலைக் கல்லூரியில் முதற்கட்ட கலந்தாய்வு

image

மேலூர் அரசு கலைக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை(மே 28) தொடங்கி நடைபெற உள்ளது. 2024-25ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கு நாளை முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், தேசிய மாணவர் படை, ராணுவத்தினர் வாரிசுகள் ஆகியோருக்கு கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் இன்று(மே 27) தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

நாகை: சாராயம் விற்ற 18 பேர் ஒரே நாளில் கைது!

image

நாகை நகர டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது.
8 எஸ்ஐ தலைமையில் போலீசார் 3 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் மஃப்ட்டியில் மதுவிலக்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
நாகை உட்கோட்டத்திற்கு உட்பட்ட, திட்டச்சேரி, திருமருகல், வலிவலம் திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சாராய கடத்தல் மன்னன்கள் 4 பேர் உட்பட 18 பேரை அதிரடியாக நேற்று(மே 26) கைது செய்தனர்.

News May 27, 2024

பள்ளி திறப்பு: புதுச்சேரியில் தயார் நிலை!

image

புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் முதல் வாரத்தில் மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து கூறிய அதிகாரிகள், புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 77 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பெங்களூருவில் இருந்து 7.50 லட்சம் பாடப் புத்தகங்களும், தமிழகத்திலிருந்து 12 ஆயிரம் தமிழ் பாடப் புத்தகங்களும் வாங்கப்பட்டுள்ளதாக கூறினர்.

News May 27, 2024

உத்தமபாளையம்: வெளியான முக்கிய அறிவிப்பு

image

உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான தொடக்க கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பில் சேர ஆர்வம் உள்ள மாணவர்கள், மாணவிகள் http://scert.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 73730 03457 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

தென்காசி சேவை செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

image

தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதல்வர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் நிறுவனம் ஆகிய இரண்டு வகையான பிரிவிற்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவின் போது இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.

News May 27, 2024

குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ 

image

சாமியாபுரம் கூட் ரோடு, மஞ்சவாடி காளிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர், எஸ்.ஐ., நாகேந்திரன் ஆகியோர் அடங்கிய குழு, பெட்டிக்கடைகள் மளிகை கடைகளில் ஆய்வு செய்து ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு, ‘சீல்’ வைத்தனர். பின் கடைக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

News May 27, 2024

திருத்தணி கோவிலில் உள்துறை செயலாளர் சாமி தரிசனம்

image

திருத்தணி முருகன் கோவிலுக்கு நேற்றைய தினம் தமிழ்நாட்டின் மாநில உள்துறை செயலாளர் அமுதா தன் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தார். இதன் பின்னர் கோவிலுக்கு சென்று ஒவ்வொரு சன்னதிகளுக்கும் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது அவருடன் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி விக்னேஷ் தமிழ்மாறன் உடன் இருந்தார்.

News May 27, 2024

குமரி முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்திற்காக பயன்படுகின்ற முக்கடல் அணை கடும் வெயில் காரணமாக 1 அடிக்கும் கீழாக நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில் தற்போது பெய்த கன மழையின் காரணமாக இன்று (மே.27) காலை நிலவரப்படி முக்கடல் அணை 12 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிகிறது.

error: Content is protected !!