Tamilnadu

News May 27, 2024

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனிக்கை துறை அலுவலகத்தில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 4 மணி நேரத்திற்கு மேலாக அடிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கணக்கில் வராத பணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News May 27, 2024

18 ரயில் நிலையங்களில் டிக்கெட் தானியங்கி

image

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 14 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்க தானியங்கி இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கூடுதலாக திண்டுக்கல், பழனி, காரைக்குடி, இராமேஸ்வரம், ராமநாதபுரம், கல்லிடைக்குறிச்சி, மானாமதுரை, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் வைக்க அனுமதி வழங்கி தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

News May 27, 2024

டென்சிங்க் நார்கே தேசிய சாகச விருதுக்கு அழைப்பு

image

நீர், நிலம், மலை போன்ற சாகசத் துறைகளில் (Adventure Sports) இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், டென்சிங்க் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஜூன் 14 வரை http://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

News May 27, 2024

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விருது

image

தமிழ்நாடு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு நடத்திய மூன்றாவது மனிதவள மேலாண்மை உச்சி மாநாடு 2024-இல், பொது மற்றும் பெரிய நிறுவனங்கள் பிரிவின் கீழ் சிறந்த மனிதவள நடைமுறைகளுக்கான வெற்றியாளராக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு ஸ்கோர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இன்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக மனித வள தலைமை பொது ராஜரத்தினம் பெற்று கொண்டார்.

News May 27, 2024

மதுரையில் நாளை வெடிக்கும் போராட்டம்

image

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கேரளா அரசு முல்லைப்பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவதற்கான விண்ணப்பத்தை வழங்கியுள்ளது. இதனை மத்திய அரசு நிராகரிக்க வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நாளை காலை 11 மணிக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து விவசாயிகள் சங்க குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

கேரளா அரசுக்கு எதிராக தீர்மானம்

image

மேலூர் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாய நல சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று மூவேந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசை கண்டித்தும், கேரளா அரசுக்கு மத்திய அரசு அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றி வரும் 30ல் மேலூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டது.

News May 27, 2024

சாலைகள் சேதமடைவதை தடுக்க ஆட்சியர் ஆலோசனை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் சேந்தமங்கலம் – இராசிபுரம் சாலையில் கிரசர் நிறுவனங்களின் சரக்குந்து வாகனங்களில் அதிக பாரத்துடன் கொள் அளவுக்கு மேல் எடுத்து செல்வதால் சாலையில் சிதறி விபத்துகள், சாலையின் மேல்தளம் மற்றும் சாலை உபகரணங்கள் சேதமடைவது தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News May 27, 2024

தனியார் நிதி நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு

image

குற்றப்பிரிவு போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் உமன்ஸ் பாலிடெக்னிக் அருகில் இயங்கி வந்த Sunmaxs என்ற நிறுவனத்தின் மீதும் அதன் CEO ஆக இருந்த சிவராமகிருஷ்ணன், கீதா என்ற கீதாஞ்சலி ஆகியோர்கள் மீது இன்று கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே Sunmaxs நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் மனு தருமாறு தெரிவித்துள்ளனர்.

News May 27, 2024

கல்வி உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பின்படி அரியலூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் https://overseas. tribal. gov. in/ மூலம் இணையவழியில் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News May 27, 2024

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலி

image

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (70). இவர் ஈரோடு முத்தூர் மெயின் ரோட்டில் லக்காபுரம் கடையில் மருந்து வாங்க நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த அடிபட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!