India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று பொள்ளாச்சி மற்றும் கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில், அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஈரோடு மக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவானி அடுத்த வரதநல்லூர் நீரேற்று நிலையத்தில் 2000 கி.வா மற்றும் 1250 கி.வா திறன் உள்ள 2 ஜெனரேட்டா், சூரியம்பாளையம் மற்றும் வஉசி பூங்கா நீா்தேக்க தொட்டிகளுக்கு 1,250 கி.வா உள்ள ஜெனரேட்டா் என 4 ஜெனரேட்டா்கள் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி பொறியாளா் விஜயகுமாா் தெரிவித்தார்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர்.எனவே முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் முட்டை விலை 40 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் இன்று (மே 28) நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறையை முற்றுகையிட்டனர். விடைத்தாள் திருத்துவது மட்டுமே ஆசிரியர் பணி மதிப்பெண் பதிவேற்றம் செய்வது பல்கலைக்கழத்தின் பொறுப்பு எனக்கூறி இந்த முற்றுகையை நடத்தினர். இதனால் பரபரப்பு நிலவியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாம்பழ குடோன்கள், மாம்பழ விற்பனை கடைகள் மற்றும் பழ குடோன்களில் கடந்த 25 நாட்களில் 239 கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் செயற்கை ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 158 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 16 வியாபாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ.16,000 அபராதம் விதித்தனர்.

உலகம் முழுவதும் இன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி நகர் பகுதியில் இயங்கி வரும் அனிபா பிரியாணி நிறுவனத்தினர் உலக பசி தினத்தினை அனுசரிக்கும் விதமாக மாவட்டத்தில் பசியால் வாடக்கூடிய 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தங்களது நிறுவனத்தின் சார்பில் பிரியாணி தயார் செய்து வழங்கினர். இந்நிகழ்வை சின்னத்திரை பிரபலம் KPY.பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

லாரி ஓட்டுநரான பழனிசாமி (50), குஜராத் மாநிலத்தில் இருந்து சேலத்தில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு இயந்திர சாதனங்களை ஏற்றிக் கொண்டு நேற்று சென்றாா். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது, திடீரென சாலையின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணியால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரிசூலம் தனியார் திருமண மண்டபத்தில் சுமார் 500 நபர்களுக்கு சம்பந்தி விருந்து நிகழ்ச்சி் நடைபெற்றது. இதில் இதில் ஏராளமான பொது மக்கள் அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ச்சி உடன் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்

திண்டுக்கல், பழனி சட்டமன்றத் தொகுதி ஆயக்குடி பகுதியில் பழங்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாம்பழ குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த பழங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் அருகே மாப்பிள்ளை கோவில் தெரு மற்றும் புதிய பேருந்து நிலையம், கோட்டை தெரு பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நவீன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 1000 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.