India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக்கூறி ரூ.300 கோடி மோசடியில் ஈடுபட்ட நபரை சேலத்தில் போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த பிடிஎம் குரூப் ஆஃப் நிறுவனம் திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்துள்ளது. கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து 3000 பேரிடம் பணமோசடி செய்ததாக புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடு குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மா.மஞ்சுளா தலைமையில் இன்று நடந்தது. இதில் வருகிற ஜூன் 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல் முறைகளை பின்பற்றி அதற்கான முன்னேற்பாடு பணிகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மரு ச.உமா தலைமையில் வேட்பாளர் முகவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது அனைத்து வேட்பாளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடை பெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் – 1 தேர்வு வருகிற 13.07.2024 அன்று நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி முகாம் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. முன்பதிவு செய்து தேர்வர்கள் பயன்பெற ஆட்சியர் அறிவுறுத்தல்

திருச்சி, கிராப்பட்டியில் அந்தோணி என்பவர் ஒரு வீட்டிற்கு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர்,இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழக வணிக உதவியாளர் அன்பழகன் என்பவரை தொடர்பு கொண்டார். அன்பழகன் ரூ.20,000 லஞ்சம் கேட்டு பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

நாமக்கல், முத்துகாப்பட்டி கிராமத்திற்கு அருகில் உள்ளது தத்தகிரி முருகன் கோயில். இந்த கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. சன்னியாசி கரடு என்று அழைக்கப்பட்ட இந்த கோயிலில், பல சித்தர்கள் தவமிருந்தாக கூறப்படுகிறது. பழமையான கோவிலான, இங்கு சுயம்பிரகாச அவதூத சரஸ்வதி சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துள்ளார்.

இந்திய விமானப்படையில் இசை கலைஞர் தேர்விற்கு பெங்களூரு 7ஆவது ஏர்மேன் தேர்வு மையத்தில் ஜூலை 3 முதல் 12 வரை ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இத்தேர்வு குறித்த முழு விவரங்களை https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு, விருப்பம் தகுதி உள்ளோர் ஜூன் 5-க்குள் இணையதளம் மூலம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் அதிகளவில் விண்ணப்பித்து பயன்பெற கலெக்டர் விஷ்ணு சந்திரன் இன்று தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மருதூர் சுடுகாட்டுப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் பம்ப் ஹவுஸ் அமைப்பதற்கான பணியினை நகராட்சி நிர்வாகம் செய்ய தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் என கூறி ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது. நாளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன்குமார் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கண்ணன் மேற்பார்வையில் திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளா் சிவக்குமாா் திருப்பாச்சேத்தி அருகே 4 மாத ஆண் குழந்தையைக் கொலை செய்து புதைத்த வழக்கில் தாய், தந்தை, பாட்டி ஆகியோரை நேற்று காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடியில் உள்ள கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளன. கோவில்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது இந்த கழுகுமலை. இங்குள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலை.
Sorry, no posts matched your criteria.