India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திருச்சிறுகுடி கிராமத்தில் மங்களாம்பிகை சமேத சூட்சமபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் செவ்வாய்க்கென்று தனி சன்னதி உள்ளது இக் கோயிலில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவரது மகன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்வில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாய குழுக்கள் கட்டணம் செலுத்தி தேசிய அங்கக உற்பத்தி திட்டத்தில் அங்ககச்சான்று பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஒரே கிராமத்தில் அல்லது அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் ஒரு குழுவாக அமைத்து பங்கேற்பாளர் உறுதி அளிப்பு திட்டத்தில் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் தரச்சான்று பெறலாம்.

திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: எண்டோஸ்கோப்பி என்பது இரைப்பையில் உள்ள திசுக்களின் நோய்களை கண்டறிய பயன்படுகிறது. ஆனால், அல்ட்ராசவுண்ட் மூலமாக குடலின் தோல் பகுதி மற்றும் வெளிப்புற திசுக்களின் நிலையை கண்டறியலாம் என தெரிவித்திருந்தனர்.

தேனி மாவட்டத்தில் தாலுகா வாரியாக தேனி 46, ஆண்டிப்பட்டி 21, போடி 18, பெரியகுளம் 24, உத்தமபாளையம் 45 என மொத்தம் 154 மையங்களில் ஜூன். 9-ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் தாலுகா வாரியாக தேனி 12,433, ஆண்டிப்பட்டி 5098, போடி 5190, பெரியகுளம் 6610, உத்தமபாளையத்தில் 11538 பேர் என 40,869 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபாரதம் சொற்பொழிவு மகாபாரத கடந்த 39 ஆம் நாட்களாக நடைபெற்றது. இதில் அர்ச்சுனன் தபசு, துரியோதனன் படுகளம், பாஞ்சாலி துயில் உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை பழங்காநத்தம், ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், செல்லுார் பகுதிகளில் நேற்று சில டெப்போக்களில் நுகர்வோர்கள் அதிகம் வாங்கும் அரை லிட்டர் கோல்டு, டீக்கடை நடத்துவோர் வாங்கும் ‘டீ மேட்’ பாக்கெட்டுகளிலும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கெட்டுப் போன பாக்கெட்டுகளை ஆவின் திரும்ப பெற்று, மாற்று பாக்கெட்டுகள் வழங்கியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுக்கு சங்கருக்கு கஞ்சா சப்ளை செய்த வழக்கில் பாலமுருகன் என்பவரை பழனிசெட்டிபட்டி போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து நேற்று (மே.29) 3:00 மணி வரை விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலமுருகன், ஆந்திராவில் இருந்து வரும் கஞ்சாவை துாத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரியும் லாரி டிரைவர்களிடம் பெற்று, அதனை மகேந்திரன் என்பவருக்கு வழங்கினேன். அவர் அதனை சவுக்கு சங்கர் உதவியாளரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு கொத்தமல்லி
ஓசூரிலிருந்து நாள் ஒன்றுக்கு 40 கிலோ எடை கொண்ட 200 சிப்பம் விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது 100 சிப்பம் மட்டுமே வருகிறது. இதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
15 நாட்களுக்கு முன்பு வரை 700 முதல் 900 கிராம் எடை கொத்தமல்லி கட்டு ரூ.50க்கு விற்ற நிலையில், தற்போது வரத்து குறைவால் மொத்த விற்பனையில் ரூ.150, சில்லறையில் ரூ.180 விற்பனையாகிறது.

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், சாட்சிய சட்டம், பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதீய சாக் ஷயா சன்ஹிதா என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. ஜூலை 1ல் இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ள நிலையில், தேனி மாவட்ட எஸ்.பி., அலுவலக கூட்டரங்கில் நேற்று (மே.29) போலீசாருக்கு அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர்.

கொடைக்கானலில் பிளம்ஸ் பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் விலை சரிந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொடைக்கானல் பெரும் பள்ளம், மேல்பள்ளம் , பெருமாள்மலை, வில்பட்டி, பேத்துப்பாறை, வட கவுஞ்சி ஆகிய மலைப் பகுதிகளில் பிளம்ஸ் சாகுபடி செய்யப்படுகிறது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பிளம்ஸ் விளைச்சல் அதிகமாக இருக்கும் கடந்த ஆண்டு 1 kg 90 க்கு விற்பனையானது தற்போது 80 க்கு விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.