India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் அடுத்த கெஜ்ஜிநாயக்கன்பட்டி சேர்ந்த முருகன் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்ய திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். நேற்று பத்திர பதிவு செய்து கொடுத்து வெளியே வந்த போது ஏற்பட்ட தகராறில் ஏற்பட்டு கோவிந்தன் மகன் அரிஷ் என்பவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் விநாயகமூர்த்தி என்ற இளைஞரை குத்தினார்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் தோப்புப்பட்டி குடியிருப்பு அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. அதன் பின்புறம் 8 மாத பெண் சிசுவின் உடல் முள்புதரில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரெட்டியாா்சத்திரம் போலீசார் இறந்த சிசுவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். \போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வருகிற 4ம் தேதி நெல்லை மக்களவைத் தொகுதிக்கான வாக்குகள் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். வாக்கு எண்ணிக்கையின் போது மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த எலக்ட்ரானிக்ஸ் சாதனைகளுக்கும் அனுமதி கிடையாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் குளம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது. தகவல் அறிந்து சென்ற மேல்மருவத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி திசையன்விளை பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த நிலையில் அவர் இறந்து கிடந்த போது அவரது மனைவி தூத்துக்குடியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் நேற்று அங்கு விசாரணை நடத்தினர்.

முத்துப்பேட்டை அடுத்த வேப்பஞ்சேரியில் அசோகன் என்பவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருத்துறைப்பூண்டிக்கு உறவினர் வீட்டு நிச்சயதார்த்தற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது வீட்டை உடைத்து வீட்டில் இருந்த யாரோ மர்ம நபர்கள் 2ஆயிரம் ரொக்கம், காமாட்சி விளக்கு, சந்தன பேலா, குங்கும சிமில் ஆகியவை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது . வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை முழுமையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் செல்போன், ஐபேட், மடிக்கணினி, போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை உள்ள எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்.

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் மணி என்பவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மணி தூண்டுதலில் அவரது நண்பர்கள் பழனி, நவநீத் , சுரேந்தர், ஹரி ஆகியோர் பெண்ணை கடத்தி சென்று காருக்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் உள்ள நியாய விலை கடைகளுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய அரிசி, பருப்பு ஆயில் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பகுதியாக இன்று காலையிலேயே வேளாங்கண்ணி பகுதியில் உள்ள அரசு நியாய விலைக் கடைக்கு பணியாளர்கள் பொருட்களை இறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற 4683 மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை, இளம் அறிவியல் என 13 பாடப் பிரிவுகளில் மொத்தம் 880 இடங்கள் உள்ள நிலையில் 4683 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளன. இதையடுத்து கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. கலந்தாய்வில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.