India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே செல்லும் உப்பாற்று ஓடையை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, உப்பாற்று ஓடைக்கு செல்லும் உபரிநீர் கால்வாய்களில் முட்செடிகள், கழிவுகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரி அகற்றி மழைநீர் தடையில்லாமல் வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ள 28வது திவ்ய தேசமான திரிவிக்கிரம பெருமாள் கோயில். பாடலிகவனம் என்றழைக்கப்படும் இங்குள்ள பெருமாள், சீராம விண்ணகரம் தாடாளன், மற்றும் திருவிக்கிரம பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். புராணக்கதைகளைக் கொண்ட இக்கோயிலில் ஒருநாள் மட்டுமே உற்சவர் தரிசனம் செய்வார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரமும், அர்த்த மண்டபம் மகாமண்டபம் என 2 மண்டபங்களும் உள்ளன.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 41-வது வார்டில் பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றிவிட்டு, புதிய மின் விளக்குகள் அமைக்க கோரி கவுன்சிலர் சாந்தி பாண்டியன் மாநகராட்சி அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று புதிய எல்.இ.டி மின் விளக்குகள் மாற்றும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக கவுன்சிலர் சாந்தி பாண்டியனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விருதுநகர் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவர் மே 27ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உள் தாழ்பாள் போடப்பட்டிருந்தது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த மூன்று பவுன் செயினை அடையாளம் தெரியாத நபர் திருடி மாடி வழியாக தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து மேற்கு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது. தற்போது தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. எனவே அலுவலகம் கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டி நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று நேரில் சந்தித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கோரிக்கை மனு அளித்தார்.

கரூரில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது மாயனூர் கதவணை. தவிட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, வாங்கல் வழியாக மாயனூர் நோக்கி செல்லும் காவிரி ஆற்றின் குறுக்கே மாயனூரில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையின் நீரிலிருந்து கட்டளை, தென்கரை போன்ற வாய்க்கால்களில் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. இது 1,233 மீநீளத்திற்கு, 98 ஷட்டர்களுடன் கட்டப்பட்ட கதவணை, 2014 முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

நாமக்கல் மாவட்ட கோழி கறி விற்பனை சில்லறை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ. 260 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு குறித்து கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள், தமிழகத்தில் கடந்த மாதம் வீசிய வெப்ப அலை காரணமாக கறிக்கோழிகள் உயிரிழந்து விட்டது.
இதனால் கறிக்கோழி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே விலை உயர்ந்துள்ளது.

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.அருங்காட்சியகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட பழமையான கருங்கல் சிலைகள் வைப்பதற்கு முறையான இடம் இல்லாமல் ஆங்காங்கே கிடந்தன. இதனையடுத்து அருங்காட்சியகத்தை
ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை இன்று கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நாமக்கல் மாவட்டத்தில் கோடை மழை பெய்ததால் ஆங்காங்கே சில பகுதிகளில் குளிர்ச்சி நிலவியது.இதனைத் தொடர்ந்து இன்று 30ஆம் தேதி நாமக்கல் நகரில் வெயில் வாட்டி வைத்தது கடந்த சில நாட்களாகவே நாமக்கலில் இந்த நிலை தொடர்கிறது.இதன் காரணமாக எலுமிச்சை சாறு பருக மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதன் தேவை அதிகரித்துள்ளது.நாமக்கல்லில் உழவர் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பட்டியலின மக்கள் தொழில் முனைவோர் ஆகிட(அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – AABC) அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் வாயிலாக 48 நபர்களுக்கு ரூ.798.31 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.