India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாளை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ச.உமா வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்திக்கிறார். எனவே அங்கீகரிக்கப்பட்ட அனைத்து செய்தியாளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு செய்து தொடர்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (ஜூன் 1) ஜிடிபி ஹாலில் காலை 10 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் ஆகியோருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் மற்றும் பொட்டியபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான கருப்பூர் குள்ளகவுண்டனூரை சேர்ந்த சாரதியை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை தணிக்கை குழு கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து ஆட்சியர் கமல் கிஷோர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டி இரட்டை விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வழக்கறிஞர் விஜயகுமாரை கைது செய்ய வலியுறுத்தியும் விஜயக்குமாருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து புனைவழக்கு பதிந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அப்பாவிகளை கைது செய்வதைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அய்யலூர் SK.நகரில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவறிந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று (மே 31) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விபத்துக்கள் போன்றவைகளில் மனித உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படும் 3 விதமான விருதுகளை பெற தகுதி உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் வருகிற ஜூன் 9ந் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 6244 காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 4 ” தேர்வு நடைபெற உள்ளது.மதுரையில் குரூப் 4 தேர்வு நடைபெறும் நாளில், தேர்வில் பங்கேற்போர் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகளுக்கு, மதுரை ஆட்சியர் இன்று அறிவுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மே.,31) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி உதவி ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் ஜோதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த 28ஆம் தேதி துவங்கியது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் இந்த நீச்சல் பயிற்சி வகுப்பானது ஜுன் 9ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய விரும்பும் திருச்சியை சேர்ந்த தகுதி, விருப்பம் உள்ள செவிலியருக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர, தமிழ்நாடு அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்,வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.