Tamilnadu

News March 21, 2024

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மரகன்றுகள் நடும் விழா

image

செங்கல்பட்டு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு மரகன்றுகள் நடும் விழா இன்று (மார்ச்-21) நடைபெற்றது. ஆலப்பாக்கம், வனக்குழு தலைவர் வி.ஜி.திருமலை தலைமையில் நடைபெற்ற  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்தார். 

News March 21, 2024

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு

image

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாக துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சிசிடிவி மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

News March 21, 2024

கடலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சீரடி சாய்பாபா ஆலயத்தில் பங்குனி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு, இன்று சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

News March 21, 2024

செங்கம் அருகே பக்தர்கள் தரிசனம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி சமேத ஶ்ரீ கறைகண்டீஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா 2024 ஏழாம் நாள் உற்சவம் திருத்தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

News March 21, 2024

புதுகை அருகே மீன்பிடித் திருவிழா கோலாகலம்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூ திருவிழா மற்றும் அக்னி பால்குட திருவிழாவை முன்னிட்டு கொன்னைப்பட்டி கொன்னை கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா தூரி கச்சா இவைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துச் சென்றனர்.

News March 21, 2024

புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

image

புதுவையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்யவும், தேர்தல் நடத்தை விதி மீறல்களை கண்காணிக்கவும், புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியால் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை வகித்தார்.

News March 21, 2024

மார்ச் 22ல் முதல்வர் பிரச்சாரம்

image

தமிழ்நாட்டில் ஏப்ரல் -19 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பெரம்பலூர் ,திருச்சி தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மார்ச்-22 சிறுகனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும் , முதல்வருமான மு‌.க‌‌.ஸ்டாலின்
அறிமுகம் செய்து பரப்புரையை தொடங்குகிறார்.
பொதுக் கூட்ட திடலை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 21, 2024

மயிலாடுதுறையில் கொலை குற்றவாளிகள் 5 பேர் கைது

image

மயிலாடுதுறையில் அஜித்குமார் என்கின்ற இளைஞர் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் குற்றவாளிகள் சந்திரமோகன் (29) , சதீஷ் (26), பாலாஜி(29), ஸ்ரீராம் (27). சந்திரமௌலி ஆகிய ஐந்து நபரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 21, 2024

வேடசந்தூர்: மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

image

வடமதுரை இபி காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (64)., மனைவி கஸ்தூரிபாய் கொடைக்கானலில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் இன்று காலை துர்நாற்றம் வீசியதால் அருகில் வசிப்பவர் வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த ராதாகிருஷ்ண உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2024

தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

சேலம் தெற்கு ரயில்வே பயணிகள் கவனத்திற்கு
மங்களூருவில் இருந்து ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு மார்ச் 22ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!