India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக சுந்தர் என்பவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட பொழுது 82 வயது முதியவர் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்தார். உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைவில் கிடைக்கும் உத்தரவாதம் அளித்தார்.

ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காந்தி நகரைச் சேர்ந்த பாபு என்ற மாற்றுத்திறனாளி சுயேட்சை வேட்பாளராக இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளிடமும் சென்று வாக்கு சேகரிப்பேன் என அவர் தெரிவித்தார்.

தி.மலை மத்திய பேருந்து நிலையத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 2024 மக்களவை தேர்தலையொட்டி 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (22.03.2024) மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை பேருந்து பயணிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மக்களவை தேர்தலையொட்டி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 267 பூத் மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜராஜன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டது.

வாணியம்பாடி கே.பி.ஏ பேலஸ் அருகில் நாளை (மார்ச் 23) வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளதால் மாவட்ட பொறுப்பாளர்கள் கிளை செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் பாக முகவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள மாவட்ட செயலாளர் தேவராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாக வளாகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று பதினெட்டு சித்தர்கள் கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் போட்டியிட ஆண்டிமடம் ஆறுமுகசாமி என்பவர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சொந்தமான இடத்தில் வேறொரு நபர் ஆக்கிரமித்து வீடு கட்ட தொடங்கியுள்ளார். இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று (மார்ச் 22) மாரியப்பன் நகராட்சி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் முதல் கட்டமாக திருமங்கலம் – ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது. பணியின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திட்ட அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிலையில் விரைவில் பணி துவங்கும் என தெரிவித்துள்ளனர்.

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கி. முதலிப்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலை பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சேர்ப்போம் சேர்ப்போம், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்ப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தென்காசி: பங்குனி உத்திர நாளை முன்னிட்டு மார்ச் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்திலும் ஏற்கனவே அதே நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.