Tamilnadu

News March 21, 2024

தஞ்சாவூர்: ஆட்சியர் முதல் கையெழுத்து

image

தஞ்சையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வாக்காளர் என்பதில் பெருமைப்படுங்கள் , வாக்களித்து ஜனநாயகததை காப்பாற்றுங்கள் என எழுதப்பட்ட பலகையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஆணையர் மகேஷ்வரி, கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கையெழுத்து இட்டனர். பின்னர் தொடங்கிய பேரணியை இன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News March 21, 2024

நாமக்கல்: கொடுத்த வனத்துறை

image

உலக காடுகள் தண்ணீர் தினங்களை முன்னிட்டு நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் நாமக்கல் மாவட்ட வனத்துறை கல்லூரி சுற்றுச்சூழல் பசுமை மன்றங்களின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் வனத்தில் தீ பரவினால் உடனடியாக தகவல் தர வேண்டும் எனவும் விலங்கு மனித மோதல் குறித்தும் பேசப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள் வனத்துறையினர் உள்ளிடோர் விழாவில் பங்கேற்றனர்.

News March 21, 2024

தாராபுரம், காங்கேயம் சட்டமன்றதொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுகவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது.இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார்.இந்தத் தேர்தலில் திமுக இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான். தாராபுரம், காங்கேயம் ஆகியவை இத்தொகுதியில் அடங்கும்.

News March 21, 2024

அரியலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்

image

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பது, சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப் பணியாற்றி, வேட்பாளர் சந்திரகாசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்வது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News March 21, 2024

ஈரோடு தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.

News March 21, 2024

குமரி: பெண் மர்ம மரணம் – போலீஸ் விசாரணை

image

நித்திரவிளையை சேர்ந்தவர் சஜின்ளி . இவரது மனைவி ஷானிகா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. நேற்று இரவு வீட்டில் மயங்கி கிடந்த ஷானிகாவை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது‌. இது குறித்து ஷானிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2024

பறக்கும் படை சோதனையில் ஒரு லட்சம் பறிமுதல்

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவன சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (மார்.21) கண்டமனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். இதில் அவ்வழியே வந்த சதீஷ்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 21, 2024

கோயம்புத்தூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியில், பாஜக-விற்கு வாய்ப்புள்ளதால் திமுக-வே போட்டியிட முடிவு செய்தது. திமுக சார்பில், கணபதி பி. ராஜ்குமார் போட்டியிடவுள்ளார். இவர் 2014இல் கோயம்புத்தூரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுக-வில் இணைந்தார்.

News March 21, 2024

புதுகையில் ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி புதுகையில் உள்ள திருமண மண்டபங்களில் உரிமையாளா்கள் மற்றும் அடகுக்கடை நடத்துவோருடன் மாவட்ட தோ்தல் அலுவலா் ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று ஆலோசனை நடத்தினாா். தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அவா் அப்போது பேசியது, திருமண மண்டபங்களில் அரசியல் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் அலுவலா்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 21, 2024

கடலூரில் ஆவணமின்றி பணம் பறிமுதல்

image

நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகாட்டுப்பாளையத்தில் இன்று பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுரேந்திரபால் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.78 ஆயிரத்து 300 ரூபாயை எடுத்து சென்றார்.இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து 78,300 ரூபாயை பறிமுதல் செய்து, கடலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!