India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா சதுக்கத்திலிருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற 25G அரசுப் பேருந்து, குமணன்சாவடி அருகே உள்ள மெட்ரோ ரயில் தூணில் மோதி விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கிய நிலையில், டிரைவர் உட்பட 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் தடுப்பு சுவற்றில் மோதினாரா? அல்லது பேருந்து பழுது ஏற்பட்டு மோதியதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்தனர்.
சிங்கம்புணரி அருகே உள்ள நடு அம்மாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் கொத்தனார் (45) . திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வேலை செய்யும் போது, அப்பகுதியில் உள்ள வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் நகர் மற்றும் வேடசந்தூர் வட்டங்களில் 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் பலத்த வெடிச்சத்தம் போன்ற ஒலி கேட்கப்பட்டது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து புவியியல் மற்றும் நிலநடுக்கவியல் துறையின் நிபுணர்கள் குழு ஆய்வுகள் மேற்கொண்டதில், நிலநடுக்கத்துக்கு தொடர்புடையதல்ல என அறிக்கை சமர்ப்பித்தனர். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என ஆட்சியார் சரவணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, பெரும்பேர்கண்டிகையை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார். அப்போது அச்சிறுபாக்கம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
கழுகுமலை அருகே உள்ள வள்ளிநாயகாபுரம் மேல தெருவை சேர்ந்த விவசாயி நாகராஜ் (53) . இவர் நேற்று உழவு பணி மேற்கொள்ள தனக்கு சொந்தமான டிராக்டரை ஓட்டிக்கொண்டு வள்ளிநாயகபுரம் – கழுகுமலை சாலையில் உள்ள நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது டிராக்டர் நிலை தடுமாறி ஓடையில் தலைகுப்புற கவிழ்ந்ததில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் கோட்டத்தில், மாதாந்தர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதில் திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து 20கி.மீ தொலைவில் குலசேகரபட்டினத்தில் சிறப்பு மிக்க முத்தாரம்மன் கோவில் வங்கக் கடற்கரையின் அருகாமையில் அமைந்துள்ளது.இது மிகவும் பழமையான கோயில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் தசரா பண்டிகை மிகவும் விமர்சியாக கொண்டாப்படுகிறது.கிராமிய கலைகள் மற்றும் தெய்வ அவதாரங்களில் உருவங்கள் வேடம் அணிந்து பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து அம்மனை வழிபடுகின்றனர்
நெல்லை டவுன் ஜாஹிர் உசேன் பிஜிலி என்பவரை நிலப் பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி என்ற முகம்மது தௌபிக், அக்பர்ஷா பீர் முகம்மது, கார்த்திக் என்ற அலிஷேக்(32) ஆகியோர், மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி, நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் 17.04.2025 வியாழன் இன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவல் அதிகாரிகள் விவரம். ஒவ்வாரு பகுதிக்கு செல்லும் ஒவ்வொரு காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ளனர். அவசர உதவிக்கு அந்த பகுதி காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வதால் குற்றங்கள் தடுக்கப்படுகின்றது.
Sorry, no posts matched your criteria.