Tamilnadu

News March 18, 2024

ஆம்பூர் அருகே ராணுவ வீரர்கள் வாகனம் விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா செங்கிலிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மதியம் 2 மணிக்கு ராணுவ வீரர்கள் வந்த வாகனம் விபத்து ஏற்பட்டது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் பல ராணுவ வீரர்களுக்கு காயமடைந்துள்ளனர்.

News March 18, 2024

குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

image

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொதுமக்களுக்கு இன்று (மார்ச்.18) இந்திய நாட்டின் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினர். இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்த்து மோடி ரோடு ஷோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

News March 18, 2024

சிவகங்கை ஆட்சித்தலைவர் ஆலோசனை

image

சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அச்சகங்களின் உரிமையாளர்கள், நகை அடகு கடை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் ஆகியோர்கள் அனைவரும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை முறையாக செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

News March 18, 2024

கட்டுப்பாட்டு அறையில் ஆட்சியர் ஆய்வு

image

தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் பெரும் வகையில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தல் தொடர்பாக பதிவான புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News March 18, 2024

திருச்சி கோர்ட் அதிரடி உத்தரவு.!

image

திருச்சியில் கடந்த 7.9.2020ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஜான் மேக்சிங் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், எதிரிக்கு 20 வருட சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மகிலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவலர்களை திருச்சி கமிஷனர் பாராட்டி உள்ளார்.

News March 18, 2024

நெல்லைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு டவுன் வாகையடிமுனையில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.

News March 18, 2024

ஜிப்மர்ரில் அதி நவீன எந்திரம் மூலம் நவீன சிகிச்சை

image

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இரத்த நாளங்கள் மிக துல்லியமாக கண்டறியும் அதீ நவீன எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இரத்த ஒட்ட மதிப்பீடு. சி டி கண்டறிதல் இரத்த குழாய் பிரச்சனை முதுகு தண்டு பிரச்சனை போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை ஜிப்மர் இப்போது தொடங்கியுள்ளது. இது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை செயல்படும் என ஜிப்மர் நிர்வாகம்அறிவித்துள்ளது

News March 18, 2024

மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர வாகன விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 யொட்டி 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (18.03.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க், வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News March 18, 2024

தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற பேனருடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தை வலிமை படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக (18.3.2024) விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

News March 18, 2024

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா சின்னவேப்பம்பட்டு கிராமத்தில் புல எண்: 37ல், 3.18.50 பரப்பளவில் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் மற்றும் குடியிருப்பு அமைய உள்ளதாக அதற்கான ஆணைகளையும் விடப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள தென்னை மரம் 8 வேப்பமரம் 18 மற்றும் உள்ள மரங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!