Tamilnadu

News March 19, 2024

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- இருவர் மீது வழக்கு

image

சிவகங்கை சேர்ந்த 16வயது சிறுமியிடம் 2 ஆண்டுக்கு முன் வாடிப்பட்டியை சேர்ந்த வினோத் 20, காதலிப்பதாக கூறி உடலுறவு கொண்டுள்ளார். இதையடுத்து வினோத்-ன் உறவினரான கௌதம் 31, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். சிறுமி கர்ப்பமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இருவர் மீது இன்று போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.

News March 19, 2024

திருவாரூரில் 21ல் மதுக்கடைகள் மூடல்

image

உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் விடுமுறை தினமாக அறிவித்து அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்

News March 19, 2024

கோயம்பேடு: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு

image

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் எம்பிராய்டரி இலவச பயிற்சிக்கு டோக்கன் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் சாமியானா பந்தல், பேனர் வைத்து உணவு வழங்கியதாகவும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News March 19, 2024

விடிய விடியஆண்களுக்கு விருந்து

image

நத்தம் அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாகவே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நேற்று நள்ளிரவில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னர் நேர்த்திக்கடனாக  50 ஆடுகள் பலியிடப்பட்டு ஒரே இடத்தில் சமைக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விடிய விடிய பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.

News March 19, 2024

ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி

image

அந்தியூர் அருகே உள்ள கூத்தம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (27) கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது பைக்கில் ஆப்பக்கூடல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தபால் அலுவலகம் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கியதில் லாரி பரமேஸ்வரன் பைக் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 19, 2024

புதுச்சேரியில் நாளை மின்தடை

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 03 மணி வரை ஹரி நமோ நகர் பிரியதர்ஷினி நகர். ராஜா அண்ணாமலை நகர். காமராஜ் நகர். இஸ்ரவேல் நகர். குரு நகர். ராஜீவ் நகர். சிவாஜி நகர். இந்திரா நகர். நாவர்குலம் . அசோக் நகர். போன்ற இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின்துறை அறிவித்துள்ளது.

News March 19, 2024

அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை – ஆட்சியர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இன்று(மார்ச்.19) மாலை 3 மணிக்குள் கட்டடங்களின் சுவர்களில் உள்ள விளம்பரங்கள் அளிக்கப்பட வேண்டும். மேலும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அரசே அகற்றி அந்த செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளர் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

திருப்பத்தூர் மக்களுக்கு எச்சரிக்கை

image

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் எவரேனும் சந்தேகப்படும்படி காணப்பட்டால் உடனடியாக தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9442992526 தகவல் தெரிவிக்க வேண்டும். அதை தவிர்த்து சக மனிதர்களை அடிப்பது,கட்டி வைப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என எஸ்.பி ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்தார்.

News March 19, 2024

சிவகங்கை : மார்ச் 24ல் தேரோட்டம் 

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் அருகே பட்டமங்கலத்தில் அழகுசவுந்தரி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் மார்ச் 24ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 6ல் அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் பூதமெடுப்பு , பிடிமண் கொடுத்தல் நடைபெற்றது. நேற்று 3ம் திருநாளை முன்னிட்டு இரவு அன்ன வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது

News March 19, 2024

தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தேனி மாவட்ட காவல் துறை 04546-261730, அலைபேசி எண்: 9363873078 அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!