India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மார்ச்.21ஆம் தேதி இம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய செய்திகளை பிரச்சாரங்களாக மேற்கொண்டால் அல்லது அவர்களது அலைபேசிக்கு ஆட்சேபனையான குறுங்செய்தி/பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் வந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் 93638 73078 (வாட்ஸ்ஆப்) 04546-261730 (தொலைபேசி) ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பாஜக தேர்தல் விதிமுறை மீறல் குறித்து இன்று (மார்ச் 20) புகார் அளிக்கப்பட்டது. நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அலுவலக வாயிலில் பிரதமர் மோடி படத்துடன் கூடிய விளம்பர பலகை வைக்கப்பட்டது. இந்த தேர்தல் விதி மீறல் குறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் நடராஜன் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தலை ஒட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்துள்ளது இந்நிலையில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜுன் பானர்ஜி உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் நுண் பார்வையாளர்கள் ஆகியோருடன் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டார்.இதில் எஸ்.பி.ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன்(44), விவசாயி. இவர், இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றியில் ஏறும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு
சென்ற போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், விடிஷாவில் நடைபெற உள்ள 45வது ஜீனியர் தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி மாணவர் ஆர். மகேஷ் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாணவரை இன்று கல்லூரியின் தலைவர் பழனி, செயலாளர் விஜய் ஆனந்த், பொருளாளர் ஸ்ரீதர், கல்விப்புல முதன்மையர் உடையப்பன், முதல்வர் ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநர் கோபி உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

நெல்லை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பணி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 மற்றும் ஏப்.7ம் தேதிகளில் நடக்கிறது. அதில் 24ம் தேதி பங்குனி உத்திரம், குருத்தோலை ஞாயிறு ஆகிய விழாக்கள் இருப்பதால் பயிற்சி வகுப்பை மாற்று தேதியில் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 20) அவசர கோரிக்கை மனு அளித்தனர்.

செங்குன்றம் அருகே மாதவரத்தில் திரு ராணி லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட் என்ற குடோனில் வெளிநாட்டிற்கு கடத்த வைத்திருந்த 6000 கிலோ குட்காவை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் 6000 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி பகுதியில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 7 பேருக்கு மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோத்தகிரி மாஜிஸ்திரேட் வனிதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

கீழக்கரையை சேர்ந்த ஷியாம் பிரகாஷ் என்பவர் ஏர்வாடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்ட தனது நகையை திருப்புவதற்காக இன்று ரூ.5லட்சத்தை எடுத்துக் கொண்டு ஏர்வாடிக்கு காரில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.5 லட்சத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.