Tamilnadu

News March 21, 2024

நெல்லையில் பொது விடுமுறை அறிவிப்பு

image

பங்குனி உத்திர திருவிழா வருகின்ற 25ஆம் தேதி நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் வருகின்ற 25 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) அறிவித்துள்ளார். மேலும், அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வு நடைபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

தஞ்சாவூர்: திமுகவில் உட்கட்சி பூசல்?

image

தஞ்சாவூர் மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் தீவிரம் அடைந்திருப்பதால், முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாகாணத்திற்கு தலைமையால் சீட்டு மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கு தஞ்சை திமுக வேட்பாளராக தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி என்பவரை திமுக தலைமை அறிவித்துள்ளது. பழனி மாணிக்கம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

News March 21, 2024

குமரி: யார் இந்த பொன்.ராதாகிருஷ்ணன்

image

1991-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019 வரை 9 முறை குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டவர் பொன் ராதாகிருஷ்ணன். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் 10-ம் முறையாக குமரியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

News March 21, 2024

குமரி: ரூ.10.20 லட்சம் பறிமுதல்

image

கன்னியாகுமரியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் இன்று நாகர்கோவில் அடுத்த புத்தேரி பாலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1.55 லட்சம் ரூபாயை கணேஷ் என்பவரிடம் இருந்து பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தற்போது வரை நடத்திய பறக்கும் படை சோதனையில் ரூ.10.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 21, 2024

மயிலாடுதுறை கொலை வழக்கில் மேலும் 2 குற்றவாளிகள் கைது

image

மயிலாடுதுறையில் கலைஞர் காலனியை சேர்ந்த அஜித் குமார் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 5 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து மோகன்தாஸ் மற்றும் சத்யநாதன் ஆகிய இரண்டு குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பாக மொத்தம் 7 குற்றவாளிகள் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 21, 2024

தென்காசியில் 219 வழக்கு பதிவு

image

தென்காசி மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 11 இடங்களில் நடந்தது.

News March 21, 2024

தேனியில் அமமுக, தமமுக கட்சியினர் ஆலோசனை

image

தேனியில் (21-3-2024) இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமமுக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் காசி மாயன் தமமுகவின் மாவட்ட செயலாளர் பாலா ஆகியோர் பங்கு பெற்ற இந்த கூட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது. இதில் அமமுக நிர்வாகிகள், தமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 21, 2024

இந்தியா கூட்டணி மாவட்ட ஆட்சியர் சந்தித்து புகார் மனு

image

காரைக்காலில் இன்று இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், திமுக எம்.எல்.ஏ நாஜிம், காங்கிரஸ் முன்னால் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிடோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மணிகண்டனை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் பணியில் ஆளுங்கட்சியினருக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக புகார் மனு அளித்தனர்.

News March 21, 2024

பிரதமர் கொடுத்த வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை

image

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வந்தபோது கொடுத்த தேர்தல் வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. புதுச்சேரியில் ரெஸ்டோபார்வை திறந்து விட்டு கஞ்சா மாநிலமாக ஆக்கிவிட்டார்கள். இதுதான் அவருடைய சாதனை என்று விமர்சனம் செய்தார்.

News March 21, 2024

மாவட்ட எஸ்பி அலுவலகம் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 20 காவல்துறை அதிகாரிகள் மூலம் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மேலான தகவல்களுக்கு 9042822722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!