India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. பெண் காவலர் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதூறாக பரப்பி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் சர்மிளா மீது மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ஓட்டுனர் சர்மிளாவிற்கு நீதிமன்றம் இன்ற முன் ஜாமீன் வழங்கியது.

2024 மக்களவைத் தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் 32,594 வாக்காளர்கள் கண்டறியப்பட்டு 26,508 வாக்காளர்களுக்கு விருப்பப் படிவம் (Form 12D) வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா; பட்டிவீரன்பட்டியில் பிறந்து சிவகாசியில் வசித்து வருகிறார். கணவர் இருதய சிகிச்சை மருத்துவர். மகன்களும் மருத்துவர்கள், 3-சிறுகதை தொகுப்புகள்,11- கவிதை தொகுப்புகள், 2 வரலாறு தொகுப்புகள் எழுதியுள்ளார். மது ஒழிப்பு போராட்டம், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு தேரடி அருகே வரும் திங்கள் அன்று மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

மதுரை பொதிகை நகரை சேர்ந்த 11 வயது சிறுமி நேற்று அவரது வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

17வது ஐ.பி.எல் தொடர் சென்னையில் இன்று தொடங்கும் நிலையில், சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 350 போக்குவரத்து காவல் துறையினர் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் உள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (மார்ச்.22) செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக எனவும், அதிமுகவிற்கு வெற்றி உறுதி எனவும், களத்தில் வெற்றி வேட்பாளர்கள் இருக்கின்றனர். மேலும் 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக இருந்து பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம் என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி-26 குடியரசு தினம், மார்ச் -22 உலக தண்ணீர் தினம், மே-1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் -15 சுதந்திர தினம், அக்டோபர் -2 காந்தி ஜெயந்தி, நவம்பர் -1 உள்ளாட்சி தினம் ஆகிய 6 தினங்களில் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். மார்ச் -22 இன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாகவும், தேர்தல் பணி காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவில்லை.

அய்யம்பேட்டையில் வருகின்ற 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு அய்யம்பேட்டை பாபநாசம் காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் அசோக் தலைமையில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். அய்யம்பேட்டையில் தொடங்கி 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றி கணக்கெடுப்பு ஐபிஎஸ்ஒஎஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து புதிரை வண்ணார் இன மக்களும் கணக்கெடுப்பில் தவறாது கலந்துக்கொண்டு தங்களைப் பற்றிய அனைத்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.