Tamilnadu

News March 25, 2024

தேனி: முதல்வர் வருகை: அதிரடி ஆய்வு

image

தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தேனியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தருவதை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினை வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன், எம்எல்ஏ மகாராஜன் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.

News March 25, 2024

 மமக ஆலோசனை கூட்டம்

image

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் மாநில துணை பொதுசெயலாளர் யாக்கூப் தலைமையில் 6 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மமக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News March 25, 2024

62 அடியாக குறைந்த நீர்மட்டம்

image

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்தது இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது இந்த நிலையில் இன்று நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 63.19 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 462 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.‌

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

image

அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னை ஜெயவர்தன், வடசென்னை ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News March 25, 2024

திண்டுக்கல்: பிஎஸ்பி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

திண்டுக்கல் மக்களவை தொகுதி வேட்பாளராக ஆயக்குடி பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மனோகரன் முருகராஜ் ரமேஷ் அஜித்குமார் சந்திரன் ஆடலூர் ராமமூர்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக மனுவை தாக்கல் செய்தார்.

News March 25, 2024

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

image

நாகை மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நாகை பேருந்து வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மற்றும் போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் ஆகியோர் ஈடுபட்டனர்.

News March 25, 2024

பாலியல் வன்கொடுமை: வளர்ப்பு தாய், தந்தை கைது

image

மதுரை பொதிகை நகர் பகுதியில் கடந்த வாரம் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை வளர்த்து வந்த அவரது பெரியப்பா ராணுவ வீரர் செந்தில்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அவரது மனைவி சந்திரா கொலையை மறைக்க துணையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

image

அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னையில் ஜெயவர்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் தனி தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News March 25, 2024

கார்த்திக் சிதம்பரம் வேப்பமனு தாக்கல்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங். சார்பில் போட்டியிட கார்த்திக் சிதம்பரம் தனது வேட்புமனுவை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆஷா அஜித்திடம் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் உள்ளனர்.

News March 25, 2024

நாமக்கல் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இண்டியா கூட்டணி மற்றும் திமுக கூட்டணி கட்சி கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர்‌ எஸ்.வி.மாதேஸ்வரன் இன்று 25.03.2024 நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப. அவர்களிடம் வேட்புமனு தாக்கல் வழங்கினார். இதில் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!