Tamilnadu

News March 26, 2024

தென்காசியில் அண்ணாமலை பிரச்சாரத் தேதி அறிவிப்பு

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 4-ம் தேதி வியாழக்கிழமை தென்காசி மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என பாஜக மாநில தலைமை அறிவித்துள்ளது. அதற்கான பிரச்சார ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

News March 26, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை உழவர் சந்தையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (26.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை ஒட்டி, காய்கள் மற்றும் பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட கோலத்தினை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News March 26, 2024

பிரச்சாரத்தின் போது டீ குடித்த அமைச்சர்

image

திண்டுக்கல்லில் இந்திய கூட்டணி கட்சி சிபிஎம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆதரித்து கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று ஆத்தூர் தாலுகா பஞ்சம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் பெரியசாமி தெருவோர தேநீர் கடையில் சிபிஎம் வேட்பாளர் உடன் அமர்ந்து வடை, டீ சாப்பிட்டுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

News March 26, 2024

முன்னாள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

image

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சி ராணியை ஆதரித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 26) இரவு நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்காக அவர் விமான மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். அவரை நெல்லை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

News March 26, 2024

நாமக்கல் ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டம்

image

நாமக்கல் அருள்மிகு ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நாமகிரி தாயார் மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வந்து நிலை சேர்த்தனர். தேர் வலம் வரும் வீதிகளில் பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.

News March 26, 2024

கடலூர் 10ம் வகுப்பு பொது தேர்வு கலெக்டர் ஆய்வு 

image

கடலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 438 பள்ளிகளில் பயிலும் 17,194 மாணவர்கள், 15,778 மாணவிகள் என மொத்தம் 32,972 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக மொத்தம் 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,957 தனித் தேர்வர்கள் 7 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இதில் கடலூர் மஞ்சகுப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.

News March 26, 2024

விருதுநகரில் பொது தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு

image

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்கியுள்ளன.‌ பொது தேர்வுகள் துவங்கி உள்ள நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News March 26, 2024

புதுகை அருகே பத்தாம் வகுப்பு பொது தேர்வு- கலெக்டர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை,
மாவட்ட ஆட்சித்தலைவர்
ஐ.சா. மெர்சிரம்யா, இ.ஆ.ப., இன்று (26.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர்
வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, வட்டாட்சியர் சூரிய பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News March 26, 2024

நாமக்கல்: மகளிர் கல்லூரியில் 100% வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வு

image

வரும் ஏப்ரல் 19, 2024 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் 100சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்ட வருவாய்த் துறையும், நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு மையமும் இணைந்து ‘வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘யினை கல்லூரி வளாகத்தில் 26/03/24 நடத்தியது.

News March 26, 2024

வேலூர்: 10ஆம் வகுப்பு தேர்வு… கலெக்டர் ஆய்வு

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று (மார்ச் 25) தொடங்கியது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள முஸ்லிம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!