Tamilnadu

News March 26, 2024

எம்.பி செய்த பணிகளை பட்டியலிட்டால் பரிசு

image

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், “இவர் திருப்பூர் தொகுதிக்கு செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினால் ரூ.1கோடி பரிசு வழங்கப்படும்” என்ற போஸ்டர் மண்ணின் மைந்தர்கள் கூட்டமைப்பு சார்பில் தொகுதியின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 26, 2024

காஞ்சிபுரம்: 708 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

image

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் கடந்த மாதம் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கரீஷ் சதீஷ் ரெட்டி என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 708 கிராம் தங்க நகைகள், 36 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.

News March 26, 2024

பைக் விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

image

கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (45), அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு தனது பைக்கில்  பெருமாங்குப்பம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தார். இதில் படுகாயம்டைந்த பிரபுவை அப்பகுதி மக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

News March 26, 2024

நீலகிரி எல்லையோர ஒருங்கிணைப்பு கூட்டம்

image

நீலகிரி மாவட்ட எல்லையோரம் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் உள்ளது. பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இரு மாநில மாவட்டங்களின் எல்லையோர நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் உதகையில் நீலகிரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.அருணா தலைமையில் இன்று (மார்ச்.26) நடைபெற்றது. இதில், இரு மாவட்ட காவல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News March 26, 2024

நெல்லையில் இதுவரை 23 மனுக்கள் தாக்கல்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு பிஜேபி, அதிமுக, சுயேட்சை உட்பட 3 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்த நிலையில் நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இன்று (மார்ச் 26) நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள், மாற்று வேட்பாளர்கள் உட்பட 20 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆகவே, இதுவரை மொத்தம் 23 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

News March 26, 2024

நாமக்கல் ஆட்சியர் முன்னெச்சரிக்கை

image

நாமக்கல்லில் வரும் நாட்களில் கோடை வெயிலானது வழக்கத்தைவிட அதிகரித்து அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் கவனமாக இருக்கும் படியும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளான பருத்தி ஆடை, எடை குறைவான தளர்வான வெளிர் நிற ஆடைகளை உடுத்த வேண்டும்.மேலும் குடிநீர் எலுமிச்சை சாறு,இளநீர் பருக வேண்டும்.குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை பின் பற்ற வேண்டும் என ஆட்சியர் மரு.ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 26, 2024

ராணிப்பேட்டையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல்

image

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று(மார்ச்.26) மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாலாஜா ரோடு ரயில் நிலையங்களில் போலீசார் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ கஞ்சா ராணிப்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து பெங்களூருவைச் சேர்ந்த குமாரசாமி, மதன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

News March 26, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராட்சத பலூன்

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (மார்ச்.26) மக்களவைத் பொதுத் தேர்தலை முன்னிட்டு பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது

News March 26, 2024

புதுகை அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

image

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று(மார்ச்.25) தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம்  சாவக்காடு என்ற இடத்தைச் சோ்ந்த க.மோகன்தாஸ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.பின்பு பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்தனர்.

News March 26, 2024

கடலூரில் எடப்பாடி 30 ஆம் தேதி பிரச்சாரம்!

image

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் சிவக்கொழுந்துவிற்கு ஆதரவாக வருகின்ற 30 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

error: Content is protected !!