Tamilnadu

News March 28, 2024

கிருஷ்ணகிரி: அதிமுக சூறாவளி வாக்கு சேகரிப்பு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷ் நேற்று (மார்ச் 27) மாலை ஊத்தங்கரை தொகுதிக்குட்பட்ட உப்பாரப்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக  தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

News March 28, 2024

ஈரோடு எம்.பி காலமானார்

image

ஈரோடு எம்.பி யாக தற்போது பதவி வகித்து வருபவர் கணேசமூர்த்தி(77). கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்ற இவர், ம.தி.மு.க வின் தீவிர விசுவாசியும், வைகோவின் நெருங்கிய நண்பரும் ஆவார். தற்கொலைக்கு முயன்று கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

News March 28, 2024

விருதுநகர்: ஆயுதத்தை காட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்

image

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (20). இவர் நேற்று மாலை என் புதுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு அரிவாளை காட்டி சாலையில் செல்வோரை மிரட்டியுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஆயுதங்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.

News March 28, 2024

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்கள்

image

கோவை, பொள்ளாச்சியில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு காலி பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.in யில் விண்ணப்பங்கள் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன் கோவை அலுவலகம் முகவரிக்கு அஞ்சல் மூலமோ (அ) நேரிலோ அனுப்பலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

News March 28, 2024

வேலூர் தொகுதியில் போட்டியிட 50 பேர் மனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், பகுஜன் சமாஜ் கட்சிகள், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுப்புலட்சுமி நேற்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

விழுப்புரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்

image

விழுப்புரம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (மார்ச் 27) காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம், ராஜ் சாரிடபிள் எஜுகேஷன் காவல்துறை சிறுவர் சிறுமியர் மன்றம், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

News March 28, 2024

பெரம்பலூர்: களமிறங்கும் அதிமுக வேட்பாளர்

image

மக்களவே தேர்தல் – 2024 அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அதிமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சந்திரமோகன், பெரம்பலூர் தொகுதி முழுவதும் 29.03.2024 அன்று முதல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

News March 28, 2024

பாஜக வேட்பாளருக்கு சிறப்பு பூஜை

image

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற வேண்டும் என என்ஆர் காங்கிரஸ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஓம் சக்தி ரமேஷ் மற்றும் உப்பளம் தொகுதி தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாதாள பேச்சியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

News March 28, 2024

மயிலாடுதுறை:வேட்பு மனு தாக்கலில் கலந்து அரசியல் பிரமுகர்கள்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி பாமக நகர தலைவர் கார்த்தி, முன்னாள் நகர தலைவர் குமார் உள்ளிட்ட சீர்காழி பாமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்

News March 28, 2024

அரியலூர் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் 100% வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. வாகனத்தின் மூலம் குறும்படங்களை கிராமங்கள்தோறும் ஒளிபரப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும் சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!