India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மக்களவைத் தொகுதியில் கடந்த 20-ம் தேதி 2 பேரும், 22-ம் தேதி ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதனையடுத்து 25-ம் தேதி அதிமுக, மாா்க்சிஸ்ட், பாஜக உள்பட 11 பேர் மனு தாக்கல் செய்தனா். 26ம் தேதி 6 பேரும், இறுதி நாளான நேற்று 13 பேரும் மனுதாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 33 ஆகவும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் 41 ஆகவும் உள்ளது.

சூலூர் தொகுதியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது, பேசிய எஸ்.பி.வேலுமணி வெறும் 4% ஓட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அண்ணாமலை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் அரசியல் செய்து வருகிறார். களத்தில் இல்லாத அண்ணாமலை அதிமுகவுக்கு போட்டியில்லை. அதிமுகவுடன் போட்டியிட முதலில் பூத் வாரியாக ஏஜெண்டுகளை போடுங்கள் என கிண்டல் அடித்தார்.

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியா்தாஸுக்கு ரூ.91.90 லட்சத்தில் அசையும் சொத்துகள், ரூ.5.74 கோடியில் அசையாச் சொத்துகள் உள்ளன. இவரது மனைவி மரிய திருஷ்டி ராதிகாவுக்கு ரூ.97.12 லட்சத்தில் அசையும் சொத்துகள் உள்ளன. இதில் சேவியா்தாஸின் கையிருப்பாக ரூ.25 ஆயிரம், ரூ.48.48 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம், ஓா் இரு சக்கர வாகனம், ஒரு காா் உள்ளது.

தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஏப். 1ஆம் தேதி முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமீறல்களுள் தேர்தல் பொதுப்பார்வையாளரின் அலைபேசி எண்ணான 9363966536 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை துறையின் பயனீர் விடுதியில் தங்கி உள்ள தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார், தகவல் அளிக்கலாம் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட சேமங்கலம், அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம், IP – கோவில், விஜபுரம், காரைக்காடு தெரு மற்றும் மடப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை இன்று (27.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் குமரன் உத்தரவின்படி நகராட்சி அலுவலகத்தில் சுகாதார அலுவலர் நெடுமாறன், நகர் அமைப்பு அலுவலர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம் மற்றும் மணிக்கூண்டு பகுதிகளில் நேற்று நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜய் வசந்த் எம்பி போட்டியிடுகிறார். இவர் கூட்டணி கட்சியினருடன் கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையாவை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

2024 மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, நேற்று(மார்ச் 27) சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர். பிருந்தாதேவி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூடுதல் சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினர்.

தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் செளந்தரபாண்டியனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் கலைவாணி பாலர் பள்ளியில் மார்ச்.31 இல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.