Tamilnadu

News March 28, 2024

சித்திரை திருவிழா கொடியேற்றம்

image

அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார்,  சோலைமலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
இன்று காலை
11:30 மணியளவில் பனசலாறு மலைக்கோயில்
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகிகளும் பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

தேனி: குளு குளு மலர் கண்காட்சி

image

கூடலூர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் தேக்கடியில் குமுளி கிராம பஞ்சாயத்து மற்றும் தேக்கடி ஹார்ட்டிகல்ச்சர் சொசைட்டி இணைந்து நடத்தும்16 வது மலர் கண்காட்சி மார்ச் 27 முதல் மே 12 வரை நடைபெறுகிறது. இதில் பல வகையான வண்ண மலர்கள் மற்றும் அழகு தாவரங்கள் மற்றும் வீட்டு அலங்கார செடிகள் விற்பனை மற்றும் கண்காட்சி நடைபெறும். குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

News March 28, 2024

நாமக்கல்: கண்ணீர் அஞ்சலி செலுத்திய மதிமுகவினர்

image

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நிலை குறைவால் மரணமடைந்தார் அவருக்கு மதிமுகவின் நாமக்கல் நகரக் கழகத்தின் சார்பில் நாமக்கல்லில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் நாமக்கல் நகர செயலாளர் வைகோ பாலு தலைமையில் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன் தொண்டரணி அமைப்பாளர் மூர்த்தி தொழிலாளர் அணி சண்முகம் ஆபத்துகள் அணி அன்பு மாவட்ட பிரதிநிதி எருமப்பட்டி மனோகரன் கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News March 28, 2024

திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

image

தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாசை ஆதரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

News March 28, 2024

சித்திரை திருவிழா முக்கிய அறிவிப்பு!!

image

புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் நடைபெற உள்ளது. விழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படிகள் , தேரோட்ட நிகழ்வின் போது நீர் மோர் பந்தல், அன்னதான கூடம் அமைக்க https://foscos.fssai.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து அனுமதி சான்று பெறுவது கட்டாயம் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை இன்று அறிவித்துள்ளது.

News March 28, 2024

வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர். 

News March 28, 2024

சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு தீவிரம்

image

சேலம் மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் தொடங்கியுள்ள நிலையில், போலி மற்றும் காலாவதியான குளிர்பானங்களின் விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து குளிர்பானங்கள் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்குமாறு சேலம் உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

News March 28, 2024

மான் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் காயம்

image

தென்கரை கோட்டை அடுத்த ராமியம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் அருகே தருமபுரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

News March 28, 2024

பல்கலைக்கழக பதிவாளர் முக்கிய அறிக்கை

image

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு நடத்தப்படும், “TNSET 2024” தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று (மார்ச் 28) செய்தி வெளியிட்டுள்ளார்.

News March 28, 2024

அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

image

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்  திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

error: Content is protected !!