Tamilnadu

News March 29, 2024

தேர்தல் அறிகுறியே தெரியாத நிலை

image

தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என மக்கள் கூறுவதைக்காண முடிகிறது. ராயக்கோட்டையில் அண்ணா சிலையை மூடியுள்ளதை தவிர வேறுவிதமான தேர்தல் பற்றிய தகவல்கள் தெரியவில்லை.சாதாரணமாக கிளைச்செயலாளர்கள் கூட அதைப்பற்றி பேசுவதைக்காணமுடியவில்லை. பிரச்சாரத்திற்கு 4 ஆம் கட்ட பேச்சாளர்கள் கூட வராதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2024

புதுவை முதல்வர் பிரச்சாரம்

image

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் தொகுதி தேங்காய்திட்டு முத்து மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பாஜக பாராளுமன்ற வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மத்திய, மாநில அரசு சாதனைகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏராளமான தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 29, 2024

திருப்பூர்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

News March 29, 2024

அரக்கோணம் தொகுதி: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு

image

மக்களவை தேர்தலில், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெறப்பட்ட 44 மனுக்களில், இருமுறை சமர்ப்பிக்கப்பட்ட 10 மனுக்களும் முதல் மனுவுடன் இணைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அரக்கோணம் தொகுதியில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

நாமக்கல்: பேருந்து பயணிகளை சந்தித்த ஆட்சியர்

image

மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாமக்கல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா 100% வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பேருந்து பயணிகளை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News March 29, 2024

திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம்

image

அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று முதல் மார்ச்.30 வரை மூடப்படுகிறது. எனவே திருவண்ணாமலையில் இருந்து
அரசு மருத்துவமனை, அவலூர்பேட்டை, சேத்பட், வந்தவாசி செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகவும் அல்லது திண்டிவனம் சாலை வழியாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2024

திருச்சி: தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை -ராஜேஷ்

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ராஜேஷ், திருச்சியில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியர்கள் அதிகமாக உள்ளதாக இன்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பெல், OFT, HAPP, உள்ளிட்ட தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை என்றும், நாம் தமிழருக்கு ஆதரவளித்தால் பெரும் போராட்டம் நடத்தி இதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.

News March 29, 2024

டீ போட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

image

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் இன்று காலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கருப்பையா வாக்காளர்களை கவரும் விதமாக டீக்கடைக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News March 29, 2024

திமுக வேட்பாளர் பெயரில் 5 பேர் போட்டி

image

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு உத்திகளை கடைபிடிப்பது வழக்கம். அதில் ஒரு உத்தி தான் வாக்காளர்களை குழப்பி வாக்குகளை சிதறடிக்க ஒரே பெயரில் பலரை களம் இறக்குவது. அதன்படி கோவை திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை குறி வைக்கும் விதமாக, 5 பேர் ராஜ்குமார் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்து களமிறங்கி உள்ளனர். இது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 29, 2024

வேலூர்: தங்க கவச அலங்காரத்தில் செல்லியம்மன்

image

வேலூர் மாவட்டம் புதிய பஸ் நிலையம் அருகே இது சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (மார்ச் 29) அம்மனுக்கு சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோயில் சார்பில் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

error: Content is protected !!