India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாக திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மோடி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக 50க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் நிலவுகிறது. பாரதிய ஜனதா மற்றும் தேர்தல் ஆணையம் குறுகிய நோக்கத்தோடு நடந்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வரும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எந்த விதத்திலும் சரியானது இல்லை என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு அனைத்து கட்சியினர் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் சேலம் சாலையில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தங்கமணி தலைமையில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்ததாக பொய் பிரச்சாரம் செய்வதாக தங்கமணி பேசினார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் சுதா அறிவிக்கப்பட்டு தற்பொழுது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கூட்டணி கட்சிகளான திமுக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் சுதாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெருந்துறையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருணாச்சலத்துக்கு ஆதரவாக இன்று மாலை 6 மணி அளவில் பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமாருக்கு ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருவாரூர், மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும்
என்.செந்தில்குமார் இன்று மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகளிள் தலைவர்கள், விவசாயிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். மன்னார்குடி உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார். முன் அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறகளை மீறியதாக தேர்தல் பறக்கும் படையினர் எல்.முருகன் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம் திருச்சபையில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி அருகே கூவாகம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பிரசித்திபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் இத்தாண்டு இக்கோவிலில் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்குகிறது. இதில் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் கொள்ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் உள்ள உதய பாரதி என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்த தேசிய பறவையான மயில் அதைப்பார்த்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் மயிலை பத்திரமாக மீட்டு வனத்துறையில் விட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர்..
Sorry, no posts matched your criteria.