Tamilnadu

News March 30, 2024

மயிலாடுதுறை: ஆதீன மடத்திடம் பழமை வாய்ந்த பள்ளி வழங்கல்

image

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த 147 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்க நிர்வாகிகளின் சார்பில் சண்முக சுந்தர் ராஜா பள்ளியின் நலன் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கான ஆவணத்தை தருமபுரம் ஆதீனத்திடம் இன்று வழங்கினார்.

News March 30, 2024

கடலூரில் அதிமுக கூட்டணி கட்சி கொடி கம்பங்கள் அகற்றம் 

image

கடலூருக்கு இன்று மாலை அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி வருவதை அடுத்து கடலூர் அண்ணா மேம்பாலம் தொடங்கி மைதானம் வரை அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.இதற்கு முறையான அனுமதி வாங்கவில்லை என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கடலூர் பகுதியில் இருந்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சி கொடி கம்பங்கள் போலீசார் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

News March 30, 2024

கிருஷ்ணகிரி: வெடி மருந்தால் 3 வீடுகள் சேதம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க வெடி வைத்ததில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தங்களுக்கு புது வீடு கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மேலும், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள 2 வெடி மருந்துகளை அப்புறப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். 3 வீடுகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொளாகி உள்ளது.

News March 30, 2024

அண்ணாமலை பணம் அளித்த வீடியோ பழையது

image

அண்ணாமலை ஆரத்தி தட்டின் அடியே பணம் கொடுப்பது போல் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், காவல் துறையின் விசாரணையின் அடிப்படையில், இந்த வீடியோ ஜூலை 2023-க்கு உரியது என்றும், எனவே தேர்தல் விதிமுறைகளின் வரம்பிற்குள் வராது என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.

News March 30, 2024

பெரம்பலூரில் நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம்

image

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் போஸ் வெங்கட் ஏப்ரல் 3ஆம் தேதி பெரம்பலூரில் திமுக வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

News March 30, 2024

24 மணி நேரத்தில் 51 புகாா்

image

ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிமீறல் குறித்து வியாழக்கிழமை(மார்ச்.28)மட்டும் 51 விதிமீறல் புகாா்கள் வந்துள்ளன. கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண்ணுக்கு 34 புகாா்களும, சிவிஜில் செயலி மூலம் 17 புகாா்கள் என மொத்தம் 51 புகாா்கள் வந்துள்ளன. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினா்.

News March 30, 2024

தஞ்சை அருகே ரேஷன் அரிசி கடத்தல்

image

தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடி, ராவுசாப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வினோத் என்ற நவநீதகிருஷ்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News March 30, 2024

பூக்களை தூவி பெண் வேட்பாளரை வரவேற்ற கிராம மக்கள்!!

image

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி  இன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு போன்ற இடங்களில் பொதுமக்களிடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஊர்மக்கள் பூக்களை தூவி வரவேற்பு கொடுத்தனர். 

News March 30, 2024

ஆ.ராசா காரை சோதனையிடாத அலுவலர் சஸ்பெண்ட்!

image

நீலகிரியில் பறக்கும்படையை சேர்ந்த கீதா என்ற அலுவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 25ம் தேதி நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசா எம்பியின் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, சரிவர சோதனை செய்யவில்லை என புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News March 30, 2024

சென்னையில் 20 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணி

image

சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று உத்தரவிட்டு உள்ளார் சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

error: Content is protected !!