India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு, பட்டாசு விபத்துகள் 40.74% குறைந்துள்ளதாக 2025-26 ஆண்டுக்கான தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பு வெளியீட்டில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 2024-25 இல் விதிமீறிய பட்டாசு தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது 784 வழக்குகள் பதிவு செய்து இதில் ரூ. 1.37 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <
அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் 15.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்றவர்கள் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு, 1,217 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பரிந்துரை செய்துள்ளார்.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilamtn.gov.in/citizen விண்ணப்பிக்க புதிய வசதியை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024,2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அமைப்புகளில் சிறந்து விளங்கிய குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. நேற்று (ஏப்-09) வெளியிடப்பட்ட அறிவிப்பில் 15-04-25 முதல் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. 30-04-25 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் <
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, <
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.10) காற்றின் வேகம் 30 கிலோமீட்டர்/மணி முதல் 31 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.