India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி உட்பட பலர் பங்கேற்றனர்.
சேலம், மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அம்மனை தரிசனம் செய்வதால், 21 தலைமுறையில் செய்த பாவங்கள், நோய்கள் போன்றவை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலுக்கு வர அது அவர்களை விட்டு விலகுமாம். இதை நோயால் அவதிப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், வங்கியில் இருந்து ஒருபோதும் ஏடிஎம் கார்டு எண், OTP மற்றும் PIN-களை அலைப்பேசி மூலம் கேட்டு வாங்க மாட்டனர். அவ்வாறு அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம். மேலும், இதுகுறித்து 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளனர. எனவே நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரியுங்கள்.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிக்கு முன்பதிவு செய்ய கால அவகாசம் ஆக. 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <
சாத்தான்குளம் அருகே உள்ள போலையாபுரத்தை சேர்ந்தவர் பச்சைப்பூதர்மராஜ் (83) இவரது மனைவி தங்க புஷ்பம் (73). திருமணம் ஆகி 55 ஆண்டுகள் ஆகின்றன. தங்க புஷ்பம் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களில் உடல்நலக்குறைவு காரணமாக பச்சைப்பூதர்மராஜ் இறந்தார். கணவன் மனைவி ஒரே நாளில் இறந்தது அனைவரையும் மீள துயரத்தில் ஆழ்தியுள்ளது.
கரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
கியூலெக்ஸ் எனப்படும் கொசுவால் பரவும் மனித உயிரை கொல்லும் மோசமான நோய்களில் ஒன்றான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வேலூரில் அதிகளவில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தடுக்க வேலூரைச் சேர்ந்த 5-15 வயது குழந்தைகளுக்கு செப்.12 வரை, அங்கன்வாடி குழந்தைகளுக்கு செப்.14-அக்.12 வரை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு அக்.13-நவ.,12 வரை தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது. *இந்நோய் குறித்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்*
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் நாளை ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. முருகன் வள்ளியை மணந்து சாந்தமாக அமர்ந்த மலை என்பதால், முருகனுக்கு உகந்த தினமான ஆடி கிருத்திகை தினத்தில் விரதம் இருந்து, முருகன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. திருமண வரன் பார்க்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரிமலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு கழுகுகள் வணங்கிய பெருமை உண்டு. கிரேதா யுகத்தில் சண்டன் – பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி – சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் – மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி, வேதகிரீஸ்வரை வணங்கி சாபவிமோசனம் பெற்றனர். இங்கு வந்து சென்றால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
காரைக்காலில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று தான் இந்த அம்மையார் கோயில். 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி. சிவபெருமான் இவரை அம்மையே என்று அழைத்ததால், இவர் காரைக்கால் அம்மையார் என அழைக்கப்பட்டார். இந்த காரைக்கால் அம்மையாரை திருமணமான பெண்கள் இங்கு வழிபட்டால் அவர்களது திருமண வாழ்வு சிறந்து விளங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. SHARE செய்யவும்
Sorry, no posts matched your criteria.