India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக கோவை,சேலம், உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் பயணிகள் ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் முதலக்கம்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுவரும் புதிய பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் இன்று (28.08.2025) நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இந்த ஆய்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நீலகிரியில் கனமழை காரணமாக அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய, 283 பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் 3600 முதல் நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய் துறையினரை அணுகி, அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 77 வருவாய் கிராமங்களில் வருவாய் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 3ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு செப்டம்பர் மாதம் 6ம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கேயனூர்
▶️ சோலை வாழியம்மன் கோயில், கூடுவாம்பூண்டி
▶️ ஜெயபாரதி மண்டபம், கொத்தனூர்
▶️ வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், கோலியனூர்
▶️ வேதா உயர்நிலைப் பள்ளி, கோட்டக்குப்பம்
▶️ குஷால் சந்த் பள்ளி வளாகம், திண்டிவனம்
பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். SHARE
சென்னிமலை, முகாசிப்பிடாரியூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் திலீப்ராஜ்குமார் (36) நேற்று முன் தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு ஈரோடு சென்று விட்டனர். நேற்று மாலை வந்து பார்த்த பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து அதிர்ச்சி அடைந்த அவர் சென்னிமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!
மதுரைக் கல்லுாரியில் அசார் சல்மான் சிலம்ப மையம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. சிலம்ப மையத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், 79 வகையான சிலம்ப சுற்றுமுறையை ஒன்றரை மணி நேரம் செய்து, சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். பயிற்சியாளர் அசாருதீன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
திருச்சி மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி விதை பரிசோதனை நிலையத்தில் சான்று விதை மாதிரிகள், ஆய்வாளர் விதை மாதிரிகள் மற்றும் பணி விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் விதைகளின் புறத்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் பிற ரக கலப்பு ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆரோக்கிய மாதா பிறந்த நாள் செப்.9ஆம் தேதி கொண்டாடப்படு உள்ளது. அன்றைய தினம் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்யும் வகையில் செப்.20ம் தேதி வேலை நாளாக அறிவித்தும் ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
Sorry, no posts matched your criteria.