India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களில் 2,513 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு <
பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால் இரவு 11:20க்கு இயக்கப்படும் சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரயில் சேவை மற்றும் இரவு 9:25 மணிக்கு கும்மிடிப்பூண்டி – சென்ட்ரல் இடையே இயக்கப்படும், ரயில் சேவை இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். மகளிர் உரிமை தொகை, வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம் இங்கு <
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.30) ஆனையூர், விளாம்பட்டி,ஹவுசிங் போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, எ.துலக்கபட்டி,ராமச்சந்திரபுரம், போடு ரிசர்வ்லயன், தொழிற்பேட்டை, போலீஸ்காலணி, EB காலணி, ரெட்டியாபட்டி,சாட்சியாபுரம், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம்,வேலாயுதம் ரஸ்தா பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.
பெரம்பலூரில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியர் அருன்ராஜ் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில், கல்வி சிறந்த தமிழ்நாடு எனும் தலைப்பில் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் முனைவர் கோவிசெழியன் சிறப்புரை ஆற்றினார். மண்டல இணைஇயக்குநர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். 10க்கும் மேற்பட்ட கல்லூரியிலிருந்து 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம், குவாகம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி நேரில் பார்வையிட்டார். இம்முகாம்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 03 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நடைபெற்ற முகாமில் மொத்தம் 1667 மனுக்கள் பெறப்பட்டது.
அரூர் அடுத்த கூடலூரை சேர்ந்தவர் நைனாமலை. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கழுத்தில் துண்டை கட்டி கொண்டு மரத்தில் தேன் எடுக்க முயன்றார். அப்போது தேனீக்கள் கொட்டியதால் வேகமாக கீழே இறங்கியதால் கையில் இருந்த சில்வர் பக்கெட் மாட்டிக்கொண்டது. இதனால் கழுத்தில் துண்டு இருக்கவே, இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்ட செங்குத்து ரயில் தூக்கு பாலத்தில் நேற்று (ஆக. 28) ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித் குமார் மஞ்சுவாணி தலைமையில் பாம்பன் பாலம் முதன்மை பொறியாளர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் புதிய செங்குத்து பாலத்தில் டிராலியில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குறிப்பாக இப்பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி இந்த ஆய்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேற்று அறிக்கை ஒன்றில் கூறும் போது, நெல்லை மாவட்ட போலீசார் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ மற்றும் போட்டோக்களை பதிவு செய்து பரப்புவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.