Tamilnadu

News August 29, 2025

நாமக்கல்: வி.ஏ.ஓ வை தாக்கிய நபர் மீது குண்டாஸ்

image

மல்லசமுத்திரம் அருகே பாலமேடு பகுதியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதை தடுத்த பெண் வி.ஏ.ஓ சிவகாமி மீது கடந்த வாரம் வீட்டுக்கே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய, சீனிவாசன் என்பரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில் சீனிவாசன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை காவலர்கள் சிறையில் இருந்த சீனிவாசனிடம் வழங்கினர்.

News August 29, 2025

நீலகிரியை வெளுத்த மழை!

image

நீலகிரி மாவட்டத்திற்கு நேற்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மழை நீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், உதகை, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News August 29, 2025

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. போக்குவரத்து மாற்றம்

image

மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில்,”விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று (ஆக.29) மாலை 5 மணி முதல் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டீச்சர்ஸ் காலனி, அரசு கல்லூரி, அன்னூர் சாலை சென்று செல்லலாம். இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் வாகனங்கள் ராமசாமி நகர், பாலப்பட்டி, வேடர் காலனி, சிறுமுகை நால்ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

News August 29, 2025

ஆட்சியருடன் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி மீளாய்வுக் கூட்டம் பள்ளி தலமை ஆசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 29, 2025

கடலூரில் நாளை ”உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி

image

கடலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று (ஆக.29) கடலூர் புனித அன்னாள் பெண்கள் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில். கல்விக் கடன் கோரும் மாணவர்கள் <>vidyalakshmi <<>>என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும், உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 29, 2025

புதுகை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(ஆக.28) இரவு 10 மணி முதல் இன்று(ஆக.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்.

News August 29, 2025

அரசு தொடக்கபள்ளியில் குறுவள மைய கலை திருவிழா

image

கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் அரசு தொடக்கப்பள்ளியில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்,இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமையிலும், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பாபி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் முன்னிலையிலும் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.

News August 29, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ கோதண்டநாடார் குண்சீலியம்மள் மண்டபம், ஸ்ரீபெரும்புதூர்.
▶️ சிங்கம் செட்டி சாரிட்டீஸ் மண்டபம், காஞ்சிபுரம்.
▶️ ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.
▶️ செல்வராணி மண்டபம் குன்றத்தூர்.
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். SHARE பண்ணுங்க.

News August 29, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம். திருக்கோவிலூர், சின்னசேலம் , சங்கராபுரம். ஆகிய பகுதிகளுக்கு இன்று (ஆக.29)நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம் பிறப்புச் சான்றிதழ் வருமானவரி சான்றிதழ் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

News August 29, 2025

விழுப்புரம் திமுக நிர்வாகி தந்தை காலமானார்

image

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளரும், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவருமான ரா.ஜனகராஜ் அவரது தந்தை தா.ராஜாமணி (94) நேற்று(ஆக.28) இரவு வயது மூப்பு காரணமாக உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான க.பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!