India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை (ஆக.29) மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். திறன் திட்டம், மணற்கேணி பள்ளி தூதுவர்கள் திட்டம் போன்ற பல்வேறு கல்வி வளர்ச்சி செயல்பாடுகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
கரூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் தெரியவில்லையென உறுதி செய்யப்பட்டதையடுத்து, இது ஒரு தவறான தகவல் என உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆக.28) பெங்களூரு, கொச்சினுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இயக்கப்படவிருந்த அனைத்து ஏர் அலையன்ஸ் விமான சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்காலங்களில் தெருக்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிப்பது, மழைநீர் தேங்குவது, தூய்மையற்ற குடிநீர், கொசுக்கள் உற்பத்தி, நோய் பரவுதல், மின்தடை, மரங்கள் சாய்வது மற்றும் பள்ளி, மருத்துவமனை போன்ற பொது இடங்களில் ஏற்படும் புகார்களை இந்த ஒரே இடத்தில் புகார் அளிக்கலாம். <<-1>>லிங்க் <<>>கிளிக் செய்து புகாரினை பதிவிடுங்கள். எல்லாரும் தெரிஞ்சுக்க; மறக்காம ஷேர் பண்ணுங்க
நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனை வளாகம், கழிப்பறைகள், வார்டுகள் ஆகியவற்றின் சுகாதார நிலை குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் நோயாளிகளுக்கு முறையாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
நோயாளிகள், மருத்துவர் நலன், ஆவணங்களை முறையாக பராமரித்தல் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்கான தேசிய தர நிர்ணய விருது மத்திய அரசால் கன்னியாகுமரி, ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார், திருவள்ளூர், திருவண்ணாமலை, தேனி, கன்னியாகுமரி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த 5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் தேசிய தர நிர்ணய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு காவல்துறை இன்று (ஆகஸ்ட்-28) குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, குழந்தைகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. போக்சோ சட்டம் (POCSO Act) குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஒரு வலுவான பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது.மேலும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு, உதவி எண் 1098 ஐ அழைக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்விழி, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ராமதாஸ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.